விஜயை விட்ரு தம்பி... அவரே அரசியலுக்கு ஓடிட்டாரு... சின்னத்திரை தளபதியை வெளுத்து விட்ட பிரபலம்
விஜயும், சஞ்சீவும் நெருங்கிய நண்பர்கள் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான்.
Vijay : நடிகர் விஜயை போல இனிமேல் நடிக்காதே. அவரே அரசியலுக்குள் போய் விட்டார் என சஞ்சீவை கலாய்த்து இருக்கிறார்.
சின்னத்திரையில் மிக பிரபலமான சீரியலாக இருந்தது திருமதி செல்வம். இதில் செல்வமாக நடித்து பிரபலம் அடைந்தார் சஞ்சீவ். ஆனால் அந்த சீரியலுக்கு முன்பே சின்னத்திரையில் வலம் வந்தவர் சஞ்சீவ். ஆனால் திருமதி செல்வம் தான் அவர் கேரியரை மாற்றியது.
அதுபோல நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் சினிமாவிலும் அவர் படத்தில் மட்டுமே சின்ன வேடங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் பெரிய ரோல் இல்லாததால் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.
கடந்த பிக்பாஸ் தமிழ் 6ல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தார். ஆனால் அங்கும் விஜய் புராணம் பாட ரசிகர்கள் அவரை வெளியேற்றினர்.
தொடர்ந்து சஞ்சீவ் கலந்து கொள்ளும் பே விஜய் குறித்தே அதிகமாக பேசி வருவார். இதனால் பார்ப்பவர்கள் அவரை சின்னத்திரை தளபதி எனவும் கலாய்த்து வந்தனர்.
விஜயிற்கே தான் நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். டான்ஸ் சொல்லி தந்தேன் என ஓவர் மெதப்பில் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சீரியலில் நடிக்கும் போது கூட விஜயை போல நடிப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தது.
இந்நிலையில் சஞ்சீவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஶ்ரீ குமார், நான் சஞ்சீவிடம் அடிக்கடி சொல்லுவேன். தம்பி விஜய் சாரை தயவு செஞ்சு விட்டுடு. அவரே அரசியலுக்கு போயிட்டாரு. நீ அவரை மாதிரி இனி பண்ணாதே தம்பினு சொல்லிட்டேன்.
முன்னாடி இருந்த சீரியல் இயக்குனர்கள் எல்லாம் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. ஆனா இப்ப உள்ளவங்க எது பண்ணாலும் டிவில வந்தா போதும்னு ஓகே சொல்லிடுறாங்க. இதே சஞ்சீவ் தான் திருமதி செல்வம் சீரியலில் அருமையா நடிச்சான் எனக் குறிப்பிட்டார்.
சன் டிவியில் சஞ்சீவ் நடித்து வந்த லட்சுமி தொடரில் இருந்து சமீபத்தில் வெளியேறி இருக்கிறார். இதற்கு முன்னர் விஜய் டிவியின் கிழக்கு வாசலில் தொடரிலும் ஹீரோயினை விட முதுமையாக தெரிவதாக வெளியேற்றப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.