அஸ்வத் மாரிமுத்து படத்தில் சிம்புவுக்கு இதான் கேரக்டராம்!. அட செமயா இருக்கே!...

By :  MURUGAN
Update: 2025-05-10 12:58 GMT

முன்பு போல் இல்லாமல் சிம்பு வேகமாக படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என முடிவெடுத்து கையில் 4 படங்களை வைத்திருக்கிறார். பத்து தல படத்திற்கு பின் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் அவரின் அடுத்த படம் வெளியாகவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு முன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், பட்ஜெட் காரணமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பின் வாங்கிவிட்டது. அதன்பின்னர்தான் அவர் தக் லைப் படத்தில் நடித்தார். சிம்புவின் அடுத்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில்தான் சந்தானம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு பின் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இது அவரின் 50வது திரைப்படமாகும். இந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனமும் இந்த படத்தில் முதலீடு செய்யவிருக்கிறது.


இது ஒரு சரித்திர கதையாகும். சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தை,அதாவது சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய 2 படங்களை இயக்கிவர் அஸ்வத். பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது.

எனவே, இப்போது எல்லோராலும் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியிருக்கிறார் அஸ்வத். சிம்பு படத்தை இவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டபோது ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அதில், God of love என்கிற கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. அதுதான் படத்தின் தலைப்பு என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அது தலைப்பு இல்லை என அஸ்வத் மறுத்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் காதலின் கடவுளாக சிம்பு நடித்திருக்கிறாம். அதாவது, ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி போல காதலர்களை சேர்த்து வைக்கும் வேடம் என்கிறார்கள். காதலர்களுக்கு பிரச்சனை வரும் போது அறிவுரை சொல்வது, அவர்களை சேர்த்து வைப்பது போன்ற பல விஷயங்களை அவர் செய்வார் எனத்தெரிகிறது. பல காதல் படங்களில் அசத்தலாக நடித்தவர், சொந்த வாழ்வில் சில காதல் தோல்விகளை கடந்து வந்தவர் என்பதால் சிம்புவுக்கு இந்த வேடம் பொருத்தமாகவே இருக்கும் என நம்பலாம்.

Tags:    

Similar News