சிம்புவின் 50வது திரைப்படம்... கடைசியில தயாரிப்பாளர் இவர்தானா..? வெளியான சூப்பர் அப்டேட்...!

சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இணையும் திரைப்படத்தை சிம்புவே தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

By :  ramya
Update: 2024-10-30 09:30 GMT

simbu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த நடிகர் சிம்பு இடையில் ரெட் கார்டு பிரச்சனை, உடல் எடை கூடி படங்களில் சரியாக நடிக்க முடியாமல் போனது, சரியான நேரத்தில் படப்பிடிப்பு செல்லாமல் இருப்பது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இதனால் மனதளவில் மிகுந்த சோகத்தில் இருந்த சிம்பு கடகடவென்று தனது உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கின்றார் என்று தான் கூற வேண்டும்.

அடுத்த வெந்து தணிந்தது காடு, பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், தேசிங்கு பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறி வந்தார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் தொடர்பான எந்த அப்டேட்டும் அடுத்தடுத்து வரவில்லை. இதற்கு இடையில் மணிரத்தினம் இயக்கும் தக் லைப் திரைப்படத்தில் கமலஹாசன் உடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு இணைந்து நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை முடித்து பிறகு எஸ்டிஆர் 48 திரைப்படம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரிப்பதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த படத்தை தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டது.

இதற்காக நடிகர் சிம்புவுக்கு கொடுத்த பணத்தைக் கூட அந்த நிறுவனம் திரும்ப கேட்கவில்லை. இதனை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் எதுவுமே சொன்னபடி நடக்காத காரணத்தால் இந்த திரைப்படம் கிணற்றுக்குள் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் உள்ளது.

நடிகர் சிம்புவுக்கு தேசிங்கு பெரியசாமி சொன்ன கதை மிகவும் பிடித்துப் போன காரணத்தால் இப்படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றார். இதனால் இந்த படத்தை தானே தயாரிப்பதற்கு முன் வந்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் சிம்புவின் 50-வது திரைப்படமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது என கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News