3 குழந்தைகளுடன் எஸ்.கே..! பொங்கல் ஸ்பெஷல்.. லைக்ஸை அள்ளும் குடும்ப போட்டோ!..

By :  Ramya
Update: 2025-01-14 06:51 GMT

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முன்னணி நடிகர் என்கின்ற அந்தஸ்தை பிடித்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அதற்குக் காரணம் இவர் கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் தான். இந்த ஒரு திரைப்படம் அவரை தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. தொடர்ந்து ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்று வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன் திரைப்படம் வெளியானது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது.

பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி வசூல் செய்திருக்கின்றது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி இருக்கின்றது. இதன் வெற்றி விழா பிப்ரவரி மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கிய திரைப்படம் எஸ்கே 23. இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார். இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள காட்சிகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதனை தாண்டி தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 1965 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படமும் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.


இப்படம் நிச்சயம் சிவகார்த்திகேயன் கெரியரில் மற்றொரு முக்கிய படமாக இருக்கும் என்று அனைவரும் கூறி வருகிறார்கள். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடனும் அதிக நேரங்களை செலவிடுபவர். இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆராதனா, குகன் என்கின்ற மகன் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது.

தற்போது வரை அந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்கும் சிவகார்த்திகேயன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News