சம்பளம் வாங்காம நடிச்சி எல்லாம் போச்சே!.. புலம்பும் சிவகார்த்திகேயன்!.. பராசக்தி பரிதாபம்!..
Sivakarthikeyan: கோட் படத்தில் விஜய் தனது துப்பாக்கியை கொடுக்கும் காட்சியை பார்த்த பலரும் அரசியலுக்கு போகும் விஜய் சினிமாவுக்கான தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு போகிறார் என்பதன் குறியீடாகவே புரிந்துகொண்டனர். ஆனால், அடுத்த விஜய் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை என சிவகார்த்திகேயன் சொன்னார். ஆனால், உள்ளுக்குள் அவருக்கு அந்த ஆசை இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இனிமேல் அறிமுக மற்றும் சின்ன இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டாம். விஜயை போல நாமும் பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்தார். விஜயை வைத்து துப்பாக்கி படம் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து ‘சார். உங்களின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.
அப்படி உருவான படம்தான் மதராஸி. இடையில் இந்தி பட வாய்ப்பு வந்ததால் இந்த படத்தை விட்டுவிட்டு பாலிவுட்டுக்கு முருகதாஸ் போய்விட சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்தார். அதன்பின் சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்தில் நடிக்க துவங்கினர். சூர்யா நடிக்க வேண்டிய படம் இது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை என்பதால் தனது பேன் இண்டியா கனவுக்கு ஆபத்து என சூர்யா விலகிவிட்டார்.
ஆனால், சிவகார்த்திகேயனுக்கு இப்போது பேன் இண்டியா ஆசை இல்லை. அதோடு, படத்தை தயாரிப்பது ஆகாஷ் பாஷ்கரன். இவர் உதயநிதிக்கு நெருக்கமானவர். படத்தை வெளியிடுவது ரெட் ஜெயண்ட் நிறுவனம். படத்திற்கு சர்ச்சை வந்தாலும் அது புரமோஷனுக்கு உதவும் என கணக்குப்போட்டே இந்த படத்தில் நடித்தார்.
ஆனால், ஐடி ரெய்டால் இந்த படம் அப்படியே நிற்கிறது. வருமானத்துறை அலுவலகம் சம்மன் அனுப்பியும் ஆகாஷ் பாஸ்கரன் இதுவரை ஆஜராகவில்லை. இதில் சோகம் என்னவெனில் இந்த படத்திற்கு 70 கோடி சம்பளம் பேசினார் சிவகார்த்திகேயன். சம்பளமாக வேண்டாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 70 கோடி மதிப்பில் தனக்கு வீடு கட்டி கொடுங்கள் என ஒப்பந்தம் போட்டார்.
படம் பாதி முடிந்தநிலையில், ஐடி ரெய்டால் படம் என்னவாகும் என்றே தெரியவில்லை. இந்த பிரச்சனையெல்லாம் முடிந்து படம் எப்போது டேக் ஆப் ஆகும் என்பதே தெரியவில்லை. வீடு கட்டி தருவதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே, சம்பளம் வாங்காம நடிச்சி எல்லாம் போச்சே என நெருங்கிய வட்டாரத்தில் சிவகார்த்திகேயன் புலம்பிவருகிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது. கடந்த பல நாட்களாகவே ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்த அவர் இப்போது பராசக்தி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக இலங்கை சென்றிருக்கிறார்.