விரைவில் சூரி, சந்தானம் படம் மோதல்... ஜெயிக்கப் போவது யாரு?
நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவான வரிசையில் சூரி, சந்தானம் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களில் முதலாவதாக ஹீரோவானவர் சந்தானம். ஆனால் அவர் வழி ஹீரோவானாலும் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் சூரியோ ஆக்ஷன் ஹீரோவாகி விட்டார். விடுதலை படத்தில் வித்தியாசமான சூரியைப் பார்க்க முடிந்தது. அந்த வகையில் இருவருடைய படங்களும் வரும் 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயிக்கப் போவது யாருன்னு பார்க்கலாம்.
மே 16ல் சூரி நடித்த மாமன் படம் வருகிறது. சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வருகிறது. சந்தானம் படம் அதிரிபுதிரி காமெடியா இருக்கும்னு சொல்றாங்க. அந்த டீமே அவ்ளோ ஹேப்பியா இருக்கு. புரொமோஷன் நிகழ்ச்சியில நாங்க டென்ஷனாவே இருந்தது இல்லை. ஒர்க்கையே ஜாலியா தான் செய்வோம்னு சந்தானம் சொன்னாரு.
அந்தப் படத்துக்கு சிம்பு புரொமோஷனுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினதும், சந்தானம் சிம்புவுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து வர்றாரு என்பதையும் மேடையில் பார்க்க முடிந்தது. ஒரு காமெடி படம்னா ஒரே படத்தை 3 தடவை பார்க்கற மாதிரி இருக்கும். ஏற்கனவே சந்தானத்தின் டிடி படம் ஹிட். இதுவும் ஹிட் அடிக்கும்னு தெரியுது.
சந்தானம், ஆர்யா நட்பு தொழில் முறையையும் தாண்டியது. டிடி நெக்ஸ் லெவல் படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம், சூரி இருவருமே திறமையான நடிகர்கள் என்பதை அவ்வப்போது அவர்களின் படங்களின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
மாமன் படத்தின் கதை ஆசிரியராகவும் சூரி அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இரு படங்களுக்குமே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த வகையில் படங்கள் திரைக்கு வரட்டும். எது வெற்றி என்பது தெரிந்து விடும்.
இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எப்பவுமே காமெடி ஜானருக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உண்டு. சமீபத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதகஜராஜா படம் சந்தானத்துக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்துள்ளதால் இந்தப் படத்துக்கும் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.