எல்சியூவில் வருவீங்களா? கண்டிப்பா நடக்கும்.. பெரிய மேட்டரு.. அசால்ட்டா சொன்ன சூரி

By :  ROHINI
Update: 2025-05-17 13:51 GMT

soori

இன்று தமிழ் சினிமாவில் ஒரு அற்புத கலைஞனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி. ஒரு காமெடி நடிகராக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த சூரி இன்று ஒரு ஹீரோவாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகராக இருக்கிறார். இதற்கு முன் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒரு கட்டத்திற்கு பிறகு அதை மக்கள் ரசிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் ஒரே மாதிரியான ஜானரிலேயே சந்தானம் நடித்து வந்தார்.

ஆனால் சூரியை பொறுத்தவரைக்கும் படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டரில் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்று வருகிறார். சமீபத்தில் ரிலீஸான மாமன் திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. உறவுகள்தான் ஒரு குடும்பத்திற்கு முக்கியம் என்பதை விளக்கும் படமாகத்தான் மாமன் திரைப்படம் இருந்தது. அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூரி.

மாமன் திரைப்படத்திற்கு பிறகு சூரி அடுத்து யாருடன் இணையப்போகிறார், எந்த மாதிரியான கதையில் நடிக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அவரது நிறுவனத்திற்கு கதை சொல்ல 10 பேர் வந்தால் அதில் ஐந்து கதைகள் சூரிக்காகத்தான் வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இதை பற்றி சூரியிடம் கேட்ட போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பிலேயே மூன்று கதைகள் என்னிடம் சொன்னார்கள் என்று கூறினார்.

அதனால் எதிர்காலத்தில் லோகேஷுடன் இணைந்து பணியாற்றும் நிலைமை கண்டிப்பாக வரும் என்று சூரி கூறினார். அப்போ எல்சியூவில் வருவீங்களா? என்று கேட்டதற்கு அது தெரியாது. கதைக்கு தேவைப்பட்டால் அது நடக்கலாம் என்றும் சூரி கூறினார். மேலும் சூரி சிவகார்த்திகேயன் என்றால் அது ஒரு மாஸ் காம்போ. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என படம் முழுக்க இருவரும் நகைச்சுவையை அள்ளி வீசியிருப்பார்கள்.

soori

அது மாதிரி மீண்டும் இணைவீர்களா? டூயல் சப்ஜெக்ட்டில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு இதை பற்றி ஏற்கனவே சிவகார்த்திகேயன் என்னிடம் பேசியிருக்காப்ல. அதனால் அதுவும் சீக்கிரம் நடக்கும் என சூரி கூறியிருக்கிறார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

Tags:    

Similar News