சூரி செட் பண்ணதா ? ‘மாமன்’ பட புரோமோஷனுக்கான ஸ்ட்ரேட்டஜியா இது?
soori
சூரியின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான திரைப்படம் மாமன். குடும்ப உறவுகளை மையப்படுத்தி வெளியான இந்த மாமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.சூரிக்கு அக்காவாக சுவாஷிகா நடித்திருக்கிறார். விடுதலை படத்திற்கு சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். கருடன், கொட்டுக்காளி போன்ற படங்கள் அவர் ஹீரோயிசத்தை வெளிப்படுத்திய படங்களாக அமைந்தன,
அந்த வகையில் மாமன் திரைப்படமும் அவருக்கு மற்றுமொரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை படத்தில் சூரிக்கு காதல் காட்சி இருந்தாலும் மாமன் திரைப்படத்தில் அந்த காதல் இன்னும் கூடுதலாகவே காட்டப்பட்டிருக்கிறது. சூரியின் மனைவி ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது எதையும் நினைத்து சங்கடப்பட வேண்டாம். தைரியமாக நடிங்க என்று சொல்லி அனுப்பினாராம்.
அதற்கு முன் ஐஸ்வர்யா லட்சுமியிடம் நல்ல பழகிக்கோங்க என்றும் சொன்னாராம். இந்த நிலையில் மாமன் படத்தை பற்றி பாசிட்டிவான கமெண்ட்களையே பரப்ப சூரி ஏதோ ஆள்களை செட் பண்ணி வைத்ததாக ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஏன் மாமன் திரைப்படம் வெற்றியடைய அவருடைய ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதாகவும் ஒரு வீடியோ பரவியது.
இதுவும் சூரி செட் பண்ணதாக கூட இருக்கலாம் என்று வெளியில் பேசி வருகிறார்கள். இதை பற்றி சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும் போது அப்படியே சூரி செட் பண்ணாலும் அது மீடியாக்களில் வைரலாகும் என சூரிக்கு தெரியாதா? அப்படி தெரிந்தாலும் தனக்குத்தான் அது பிரச்னையாகும் என தெரியாதா என தனஞ்செயன் கூறினார்.
soori
மேலும் மண்சோறு சாப்பிட்டது சூரிக்கு தெரிந்ததும் எல்லா மீடியாக்களிலும் சூரி பேசியிருந்தார். இந்த மாதிரி என் தம்பிகள் எனக்கு பிடிக்காததை செய்திருக்கிறார்கள் என்று கூறினார். அதுவும் அவர்கள் என் ரசிகர்களாக இருந்தால் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்றும் கூறியிருந்தார். அப்படி செய்து மாட்டிக்கிட்டு இவர் சொல்லணும்னு அவசியம் இல்லைல? யாரோ ஒரு ஆர்வத்துல பண்ணக் கூடிய ரசிகர்களாகத்தான் இருப்பார்கள் என தனஞ்செயன் கூறினார்.