பேசுற வாய் பேசிக்கிட்டேதான் இருக்கும்! கேலி பண்ணவங்க வாயை அடைத்த புகழ்
pugazh
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது கோமாளித்தனமான நகைச்சுவையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலிருந்தே புகழுக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். அதுவும் எந்த அழகான பிரபலம் வந்தாலும் அவர்கள் மீது ஜொள் விடுவது கிண்டல் பண்ணுவது இதே மாதிரியான நகைச்சுவை செயல்களை செய்தே மக்களிடத்தில் ரீச் ஆனார்.
அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கும் இவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாக அமைந்தது. இப்படி தொடர்ந்து தன்னை பற்றியே பேச வைத்த புகழ் வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். அதுவும் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். இப்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் புகழ். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
விஜயகாந்த் இறந்து ஒரு வருடம் கடந்த நிலையில் அவர் போன பிறகு விஜயகாந்த் விட்டு சென்ற பணியை புகழ் தொடர்ந்திருக்கிறார். தன்னால் முடிந்தளவு தினமும் 50 பேருக்கு ஒரு வேளை சாப்பாடு போட வேண்டும் என முடிவு செய்து இன்றுடன் 500 நாள்கள் ஆகிவிட்டது. இன்னும் இந்த பணியை தொடர்ந்து வருகிறார். இவர் இந்த பணியை ஆரம்பிக்கும் போது பல பேர் ஆர்வத்தில் ஆரம்பிக்கிறாரு.. கடைசி வரை கொண்டு செலுத்த முடியாது என பல வகைகளில் விமர்சனம் செய்தனர்.
pugazh
ஆனால் எனக்கு பிறகும் என்னுடைய குழந்தைகள் இந்த பணியை எடுத்து செய்வார்கள் என்று புகழ் பேசியிருக்கிறார். விஜயகாந்த் இந்த மாதிரி பணியை செய்யும் போது உலகமே அவரை பற்றி பெருமையாக பேசியது. எனக்கும் அப்படி ஆசை இருந்தது. அதனால் இதை நாம் செய்ய வேண்டும் என எடுத்து இது நாள் வரை செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் உங்களால் முடிந்தளவு ஒரு வேளை சாப்பாடாவது பிறருக்கு கொடுத்து உதவுங்கள் என்று புகழ் கூறியிருக்கிறார்.