தக் லைஃப் டிரெய்லருக்குள்ள இவ்ளோ விஷயங்கள் ஒளிந்துள்ளதா? யாராவது கவனிச்சீங்களா?

By :  SANKARAN
Update: 2025-05-18 11:45 GMT

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்துள்ள படம் தக் லைஃப். வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த டிரெய்லரில் நாம் பல விஷயங்களை மேலோட்டமாகப் பார்த்திருப்போம். ஆனால் கொஞ்சம் உற்றுநோக்கினால் இவ்வளவு விஷயங்கள் மறைந்துள்ளதா என்று தெரிய வரும். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

தக் லைஃப் கதைக்களம் டெல்லி தான். ஏன்னா டிரெய்லர்ல ஒரு சீன்ல கார் நம்பர் டிஎல்னு ஆரம்பிச்சிருக்கும். அசோக்செல்வன் அதிகாரியாக இருக்கறது மாதிரி அவரோட லுக் இருக்கு. சிம்பு ஒரு கார்ல இருக்குறதைப் பார்த்தா பார்டர் செக்யூரிட்டில இருக்குற ஒரு அதிகாரி மாதிரி தெரியுது. கமல் தந்தை. சிம்பு வளர்ப்பு மகன். கமலின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர். சிம்பு பெயர் அமரன்.

வழக்கமாக மணிரத்னத்தின் அக்மார்க் ஒளிப்பதிவை அதாவது இருளும், ஒளியும், நிழலும் என அதை ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் பதிவில் கண்டு ரசிக்கலாம். கமலின் ஆரம்ப டயாலாக்கில் இவன் தான் என்னை எமன்கிட்ட இருந்து மீட்டு எடுத்தவன்னு சின்ன வயது சிம்புவை சொல்றாரு. ஆனா கடைசியில இருவருக்கும் மோதல் வரும்போது இது எமனுக்கும் எனக்கும் நடக்குற கதைன்னு சொல்றாரு. அந்த வகையில எமன் யாருன்னா அது எஸ்டிஆர் தான்.

ஆரம்பத்துல கமலின் உயிருக்கு பெரிய ஆபத்து வந்துருக்கு. அதை சிம்பு சிறுவனாக இருக்கும்போது காப்பாற்றி விடுகிறான். அதே போல இருவருக்கும் கடைசியில் மோதல் வருகிறது. அப்போதும் அதே எமன் டயலாக் தான் வருகிறது. இது எமனுக்கும், எனக்கும் நடக்குற மோதல்னு சொல்றாரு கமல். அப்படின்னா வில்லன் யாருன்னு உங்களுக்கே தெரிந்திருக்கும்.


கமலும், சிம்புவும் கோபத்தின் உச்சியில் வாயைப் பிளந்து கத்துகிறார்கள். இப்படி ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதுதான் இன்டர்வலாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்போதுதான் அப்பாவுக்கு எதிராக புள்ளைத் திரும்புதா என்றும் தெரிகிறது. படத்தில் பார்க்கும்போது எஸ்டிஆர் கேரக்டர் நல்லவர் மாதிரியும், கெட்டவர் மாதிரியும் தெரியும். அது மணிரத்னமால் மட்டுமே கொண்டு வர முடியும்.

கமலின் 234வது படம் இது. தமிழகத்தில் இருக்குற மொத்த தொகுதிகளும் 234. மணிரத்னம் இதுவரை தனது படங்களுக்கு ஆங்கில டைட்டில் வைத்ததே கிடையாது. ஆனால் முதல் முறையாக இந்தப் படத்துக்கு தக் லைஃப் என்று ஆங்கில டைட்டிலை வைத்துள்ளார். அதுக்குக் காரணம் பேன் இண்டியா மூவி தான்.

கமலும், மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் பண்ணி இருக்காங்க. அதுக்கு முன்னாடி நாயகன் என்ற ஒரே படத்தில்தான் இருவரும் இணைந்துள்ளனர். தக் என்றால் கொள்ளைக் கும்பல், குண்டர்களைக் குறிக்கும் சொல். அவங்களோட லைஃப்ல நிம்மதியே இருக்காது. அதுதான் படத்தின் பொருள். கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், சிம்பு என 4 பெரிய ஜாம்பவான்கள் இணைந்துள்ள படம் இது.

Tags:    

Similar News