ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பொறுப்பு ஏற்க முடியாது.... வாடிவாசல் குறித்து வெற்றிமாறன் இப்படி சொல்லிட்டாரே!
2007ல் பொல்லாதவன் என்ற தனுஷ் நடித்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் வெற்றிமாறன். முதல் படமே அசத்தலான வெற்றி. அடுத்தும் தனுஷ் தான் ஹீரோ. அடகளம். சிறந்த இயக்குனர், திரைக்கதை என 2 தேசிய விருது வாங்கியது. அடுத்து விசாரனை, வட சென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். எல்லாமே பேசும் வகையில் தான் உள்ளது. அந்த வகையில் தமிழ்சினிமா உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆக இடம்பிடித்து விட்டார். வாடிவாசல் படம் கடந்த 5 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். அமீர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இடையில் சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்காமல் அப்படியே இருந்தது. வெற்றிமாறன், சூர்யா முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆண்டு படம் நிச்சயம் திரைக்கு வரும் என்கிறார்கள்.
நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படத்துக்கு 100 சதவீத அர்ப்பணிப்பை நான் கொடுப்பேன். நான் ஒரு படத்தில் இருந்து இன்னொரு படம் தான் எடுக்கிறேன். நான் ரசிகர்களின் எந்த எதிர்பார்ப்புக்கும் பொறுப்பாக முடியாது. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவிற்கான ஸ்டாண்டுகளை எல்லாம் சரியாக செய்ய முடியுமா என தெரியவில்லை.
ஒருவேளை வாடிவாசல் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்தது என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம்தான். ஆனால் என்னால் எந்த பொறுப்புகளையும் ஏற்க முடியாது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு சமீபகாலமாக எந்த ஒரு வெற்றியும் கிடைக்கவில்லை. ரெட்ரோ படம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வசூலைப் பெறவில்லை என்றும் பேசப்பட்டது. அந்த வகையில் வாடிவாசல் தான் கைகொடுக்கும் என்று நினைத்தால் வெற்றிமாறன் இப்படி சொல்லிவிட்டாரே என நெட்டிசன்கள் கவலைப்படுகின்றனர்.