என்ன சுச்சீ... சிவனேன்னு இருக்கும் தனுஷைப் போயா ஜெயம் ரவி விவாகரத்துல கோர்த்து விடுவீங்க...?

By :  SANKARAN
Update: 2025-05-19 11:17 GMT

ஜெயம் ரவிக்கு இன்று நடந்த சிக்கல் அன்றே ரஜினிக்கு வந்தது என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தணன். அதே நேரம் இவர் சுசித்ரா பற்றியும், தனுஷ் குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

2 குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறமும் வந்தது. ஜெயம் ரவி இன்று எடுத்த முடிவை அன்றைக்கு ரஜினி எடுத்தார். லதாவை டைவர்ஸ் பண்ணனும்னு நினைத்தார். அப்போ ஒய்.ஜி.மகேந்திரன் சொல்லி லதா நேரடியா போய் பாலசந்தரைப் பார்த்துள்ளார். பாலசந்தர் நேரா வீட்டுக்கு வந்து ரஜினிக்கு அட்வைஸ் பண்ணினார். அப்போ ரஜினி பாலசந்தர் சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டார். பல லௌஹீக விஷயங்களைத் தவிர்க்கவே முடியாது. இது எல்லாருக்கும் உண்டு. ஆனால் மனைவி என்கிறவள் வேற ஸ்தானம்.

அவள் உன்னில் பாதி. உனக்கு என்ன தேவையோ அதை வீட்டுக்கு வெளியில் வச்சிக்கோன்னு நாகரிகமாக சொன்னாராம். அந்த சுதந்திரத்தை லதாவுக்கும் கொடுக்கணும்னு பாலசந்தர் சொன்னாராம். குடும்பம் கோவில். மனைவிதான் தெய்வம். நான் இன்று உயிர் பிழைத்ததுக்கு காரணம் எல்லாம் லதா என்றெல்லாம் ரஜினி பேசினார். ஒரு கட்டத்தில் அவங்களுக்கும் இடையில் பெரிய புயல் அடித்துள்ளது

. இது மாதிரி விக்ரம் வீட்லயும் ஆயிரம் பிரச்சனை. ஆனா அவர் டைவர்ஸ் என எங்கும் போகல. அவர் தன் குடும்பம் குறித்த விஷயங்களை வெளியில் வராதவாறு பார்த்துக் கொண்டுள்ளார். ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் விஷயங்களை ஊதிப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.


சுசித்ரா ஜெயம்ரவி, ஆர்த்தி பிரிவுக்குக் காரணம் தனுஷா என கேட்டுள்ளாராம். எல்லாத்துக்கும் தனுஷ் என மையப்படுத்துவது எப்படி சரியா இருக்கும்னு தெரியல. சுசித்ராவுக்கும், தனுஷூக்கும் இடையில் ஏதோ ஒரு வகையில் பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு. ஆர்யாவுக்கு பிக்கப் டிராப் நடிகர்னே பேரு.

அவரு வந்து நயன்தாரா, அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கப் போறாருன்னு பல வதந்திகள் இருந்தது. அதை உண்மையாக்கும் வகையில்தான் அவரது நடவடிக்கைகள் இருந்தன. காரில் கொண்டு போய் பிக்கப் செய்வார். அவருக்குத் திருமணம் ஆனதும் மிக அருமையான தகப்பனாக மாறிவிட்டார்.

அந்த வயதில் வரும் கிளர்ச்சி, சுதந்திரம்தான் அதற்குக் காரணம். அந்த வகையில் இப்போது எல்லாருமே அவங்கவங்க வேலையை மட்டும்தான் பார்க்குறாங்க. ஜெயம் ரவி, ஆர்த்தி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருவரும் பேசினால்தான் சுமூக தீர்வு கிடைக்கும். புளூசட்டைமாறன் சொன்ன மாதிரி டிரம்பை தேடிப் போக வச்சிடாதீங்க என்கிறார் அந்தணன். 

Tags:    

Similar News