கல்லூரிக்குள் டிரெஸ் இல்லாமல் வந்த கமல்ஹாசன்… தலையில் அடித்துக்கொண்ட பிரபல நடிகை!..

By :  AKHILAN
Published On 2025-06-02 13:29 IST   |   Updated On 2025-06-02 13:29:00 IST

Kamalhassan: பிரபல நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே கொஞ்சம் சேட்டையான ஒரு நபர் தான். ரசிகர்களிடமே அப்படி என்றால் தன்னுடைய வீட்டு ஆளுங்களிடம் எப்படி இருப்பார். அப்படி ஒரு சம்பவம் குறித்த ஆச்சரியமான தகவல் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகள் சுஹாசினி. இவருக்கும், சித்தப்பா கமலுக்கும் எப்போதுமே ஒரு இணக்கம் இருக்குமாம். அதனால் அவரை அடிக்கடி வம்பு செய்து விளையாடுவதையே கமல்ஹாசன் வழக்கமாக செய்து வருவாராம்.

அதிலும் கல்லூரி காலத்தில் தோழிகள் முன் அவர் செய்த சேட்டைகளால் வெட்கப்படுவதையே வாடிக்கையாக்கினாராம். 12 வயதில் சுஹாசினி தன்னுடைய படிப்பிற்காக சென்னை வந்து இருக்கிறார். கமல் வீட்டில் இருந்தே படிப்பையும் தொடர்ந்தார்.

அந்த சமயத்திலே கமல்ஹாசனும் நடிப்பில் முன்னணி நடிகராக இருந்து இருக்கிறார். இதனால் தன் தோழிகளிடம் இந்த விஷயம் குறித்து எதுவும் சொல்லாமல் அதை மறைத்தே வைத்து இருக்கிறார். அப்போது சுஹாசினியின் கல்லூரி பக்கத்தில் கமல்ஹாசனின் ஷூட்டிங் நடந்துள்ளது.

எல்லாரும் அங்கு செல்லாமல் என்று சொல்ல முதலில் சுஹாசினி முடியாது என மறுத்து இருக்கிறார். பின்னர் அவர்கள் வற்புறுத்தலில் அங்கு சென்றாராம். நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா பாடலில் புகைப்பிடித்தப்படி நடித்துக்கொண்டிருந்தாராம்.

அப்போ சுஹாசினியை பார்த்து ஏய் உன்னுடைய அந்த பெயரை சொல்லவா எனக் கேட்டு சூ சூ இங்க வா எனத் தோழிகள் முன்னரே அழைத்து விட்டாராம். இவருக்கோ வெட்கமாகி விட்டதாம். அதுமட்டுமல்லாமல் அந்த காலத்தில் கமல்ஹாசன் கராத்தே உடையில் வீட்டில் பயிற்சி செய்துக்கொண்டு இருப்பாராம். அந்த உடையில் டிவுசர் கூட இருக்காதாம். 

 

பைஜாமா ஸ்டைல் உடையில் இருக்கும் கமல் வா உன்னை டிராப் செய்கிறேன் என சுஹாசினியை அழைப்பாராம். ஆனால் சுஹாசினி கீழே டிராயர் அல்ல பேண்ட் போட்டு வாருங்கள் எனக் கெஞ்சி கேட்ப்பாராம். ஆனால் கமலோ, சூ சூ நான் ஒரு பெரிய ஸ்டார். நான் கீழேயே இறங்க மாட்டேன். பெண்கள் கல்லூரிக்குள் நான் எப்படி வெளியில் வருவேன் எனச் சொல்லி அழைத்து செல்வாராம்.

ஆனால் காலேஜில் சுஹாசினி இறங்கியதும் கமலும் இறங்கி விடுவாராம். அவ்வளவுதான் மொத்த குயின் மேரிஸ் கல்லூரி பெண்களின் பார்வையும் கமல்ஹாசனின் வெற்று தொடையில் தான் இருக்கும். ஏன் இப்படி செய்றீங்க என சுஹாசினி கடுப்படித்தால் சும்மா கலாட்டா எனச் சிரித்து கொண்டே செல்வாராம். தன்னுடைய சித்தப்பாவின் சேட்டைகளை சுஹாசினி பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News