விஜய், ரஜினிகாந்தை எல்லாம் முந்திக்கொண்ட சூர்யா!.. ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் பக்கா மாஸ்!..

பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவுக்கு நாளை பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறபோகிறது.;

By :  SARANYA
Published On 2025-05-08 21:18 IST   |   Updated On 2025-05-08 21:18:00 IST

நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு கடைசியாக ஹிட்டான படமே சிங்கம் 2 தான் என்றும் 13 ஆண்டுகளாக பாக்ச் ஆபிஸில் அவரால் ஒரு ஹிட் கூட கொடுத்து வசூலை வாரிக்குவிக்க முடியவில்லை என பலரும் வெளிப்படையாகவே கிண்டல் செய்து வந்த நிலையில், இருங்கடே நான் யாருன்னு காட்டுறேன் என ரெட்ரோ படத்தில் கட் அண்ட் ரைட்டாக நடித்து 100 கோடி வசூலை சாத்தியமாக்கினார்.

சொந்த தயாரிப்பு என்பதால் சூர்யாவின் சம்பளம் பெரிய பாரமாக அமையாமல் அவருக்கு லாபமும் கிடைத்துள்ளது. 65 கோடி ரூபாயில் படத்தை எடுத்து 104 கோடி வசூல் செய்த நிலையில், 10 முதல் 20 கோடி வரை லாபம் வந்திருக்கும் என்கின்றனர்.


அதில், 10 கோடி ரூபாயை அகரம் ஃபவுண்டேஷனுக்கே அன்பளிப்பாக அளித்து மேலும், பல மாணவர்களை படிக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். நேற்று சென்னையில் உள்ள பிரபல சொகுசு ஹோட்டலான லீலா பேலஸில் சூர்யாவின் ரெட்ரோ வெற்றி விழா நடைபெற்றது. அதே இடத்தில் இன்னொரு தளத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூர்யா வந்ததை அறிந்துக் கொண்ட ஐசரி கணேஷ் அவரை சென்று சந்திக்க, பதிலுக்கு மரியாதை நிமித்தமாக அவருக்கே சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பூங்கொத்து ஒன்றை எடுத்துக் கொண்டு சூர்யா மணமக்களை வாழ்த்தினார்.


பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவுக்கு நாளை பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறபோகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தவெக தலைவர் விஜய் வரை பலரையும் அழைத்துள்ளாராம்.

ஆனால், அனைவருக்கும் முன்னதாக சூர்யா முந்திக்கொண்டு மணமக்களை வாழ்த்த சரியான சந்தர்ப்பம் கிடைத்த நிலையில் அழகாக பயன்படுத்திக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Tags:    

Similar News