பாக்ஸ் ஆபிஸ்ல இல்லன்னா என்ன..? அந்தப் படத்தால 3 லட்சம் பேர் நல்லாருக்காங்க... சூர்யா நெகிழ்ச்சி..!

ஜெய் பீம் திரைப்படம் குறித்தும், அதனால் கிடைத்த பலன் குறித்தும் நடிகர் சூர்யா நெகழ்ச்சியுடன் பேசி இருக்கின்றார்.

By :  ramya
Update: 2024-10-30 08:51 GMT

jaibhim

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்து வருகின்றார் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தை எதிர்நோக்கி அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

அதற்கு அடுத்து பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்தார். இந்த திரைப்படம் நிச்சயம் மிகச்சிறந்த படமாக சூர்யாவுக்கு அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா வெளியேறினார். அதற்கு பிறகு கமிட்டான திரைப்படம் தான் கங்குவா.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. மேலும் இப்படம் தொடர்பான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றார் நடிகர் சூர்யா.

அது மட்டும் இல்லாமல் பிரபல யூட்யூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றார். அந்த வகையில் ஒரு பேட்டியில் சூர்யா ஜெய் பீம் திரைப்படம் குறித்து பேசி இருந்தார். அறிமுகம் இயக்குனர் எல் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகச்சிறந்த படமாக வெளிவந்தது ஜெய் பீம். இந்த திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கான நீதியை மீட்டெடுக்கும் ஒரு திரைப்படமாக இது அமைந்திருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா கூறியிருந்ததாவது 'ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் 3 லட்சம் பேர் பயனடைந்து இருப்பதாக புள்ளிவிவரம் உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இப்படம்  பாக்ஸ் ஆபிஸில் இடம்பெறவில்லை என்றாலும் பலர் இந்த திரைப்படத்தால் பயனடைந்து இருக்கிறார்கள் என்பது நிச்சயம். நமக்கு பிறகும் சில படங்கள் தலைமுறை தலைமுறையாக நினைவில் நிற்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படமாக ஜெய் பீம் திரைப்படம் இருக்கும்' என்று பேசி இருக்கின்றார் நடிகர் சூர்யா.

Tags:    

Similar News