தமிழ் சினிமாவுக்கு Clash புதுசு இல்ல தான், ஆனா இவங்க Clash புதுசு... நாளை ரிலீஸாகும் திரைப்படங்கள்…

By :  AKHILAN
Update: 2025-05-15 07:00 GMT

Theatre Release: தமிழ் சினிமாவில் வாரா வாரம் படங்கள் ரிலீஸாகும். அந்த வகையில் இந்த வாரம் மோதிக்கொள்ள இருக்கும் படங்கள் குறித்த சுவாரஸ்ய அப்டேட்.

பொதுவாக ஹீரோக்கள் படங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும். அதுவே அவர் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்து இருக்கும். ஆனால் இந்த முறை கிளாஷ் என்பதே புதுசுதான். அதாவது காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய பிரபலங்களி படங்கள் தான் இந்த வாரம் மோதிக்கொள்ள இருக்கிறது.

இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாதிகா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். 

 

தாய் மாமன் பாசத்தினை சொல்லும் இப்படத்தின் டிரெய்லரே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. காமெடியனாக கிடைத்த வரவேற்பை விட ஹீரோவாக படத்திற்கு படம் சூரி மெருக்கேறி கொண்டே இருக்கிறார்.

பிரபல நடிகர் ஆர்யா தயாரிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஹாரர் மற்றும் காமெடி திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில் கௌதம் மேனன், யாஷிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

 

இப்படத்தின் டிரெய்லரில் உயிரின் உயிரே பாடலுக்கு கௌதம் மேனன், யாஷிகா காட்சிகளே பெரிய அளவில் வைரலாகியது. வித்தியாசமாக செல்வராகவன் படத்தின் பேயாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காமெடி ரோலில் நடித்து ஹிட்டடித்து வரும் மூன்றாவது காமெடி பிரபலமான யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ஜோரா கையை தட்டுங்க திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. மேஜிக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

 

காமெடி ஹீரோக்கள் மூவரின் திரைப்படமும் நாளை ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் இந்த ரேஸில் ஜெயிக்க இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News