விஷாலுக்காக கீர்த்திசுரேஷைப் பெண் கேட்டு சென்ற இயக்குனர்... அட அவரா?
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஷால். நடிகர் சங்க தலைவராகவும் இருக்கிறார். தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி தான் இவரது தந்தை.
விஷாலைப் பொருத்தவரை அவர் செல்லமே என்ற படத்தில் தான் அறிமுகம் ஆனார். தொடர்ந்து அவருக்கு சண்டைக்கோழி, திமிரு, சிலப்பதிகாரம், மலைக்கோட்டை, தாமிரபரணி, பாண்டிய நாடு படங்கள் மாஸாக இருந்தன. விஷால் மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன்.
இந்தப் படம் முழுவதும் மாறுகண்ணோடு நடித்து இருந்தார். இதனால் ஒரு வருடத்திற்கும் மேலாக தீராத தலைவலியால் சிரமப்பட்டுள்ளார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு வெளியான மதகஜராஜா சூப்பர்ஹிட் ஆனது. பொருளாதார சிக்கல் காரணமாக 12 வருடங்களாக பெட்டியில் முடங்கிக் கிடந்த படம் இந்த அளவு வசூல் சாதனை புரியும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம் படத்தின் காமெடி தான். சந்தானம் பின்னிப் பெடல் எடுத்திருப்பார்.
விஷால், நடிகை கீர்த்தியுடன் இணைந்து நடித்த படம் சண்டைக்கோழி 2. இது லிங்குசாமியின் இயக்கத்தில் 2018ல் வெளியானது. இப்போது விஷால் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக திரை உலகில் உலா வருகிறார். இவருக்கு பெண் பார்த்த சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது. அதுவும் இயக்குனரே பெண் கேட்டுச் சென்றாராம். பெண் யாருன்னு தெரியுமா? கீர்த்தி சுரேஷ்தான். இந்த சம்பவத்தைப் பற்றி இயக்குனர் லிங்குசாமி என்ன சொல்றாருன்னு பாருங்க.
விஷாலுக்கு கீர்த்தியைப் பெண் கேட்டுச் சொல்லுங்கன்னு விஷால் அப்பா சொன்னார். நான் கீர்த்திகிட்டே போய் நின்னதும், என்ன சார் இவ்வளவு தூரம்னு கேட்கிறாங்க. நான் விஷால் பத்திச் சொன்னதும், ஸ்கூலில் இருந்து இருக்கிற லவ் பத்தி கீர்த்தி சொல்றாங்க.
அவர்தான் இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டவர். கீர்த்தியோட வெற்றிக்குப் பெரிய பின்புலம் அந்தப் பையன்தான். 3 நாள் கல்யாணத்திற்கு நான் போயிருந்தேன். ரொம்ப முக்கியமானவர்களைத்தான் கூப்பிட்டிருந்தாங்க என்கிறார் இயக்குனர் லிங்குசாமி.