விடாமுயற்சியை விட அதிகம்!.. அஜித்தை ஓவர் டேக் செய்த பிரதீப் ரங்கநாதன்!...

By :  Murugan
Update:2025-02-23 16:00 IST

Dragon booking: ஜெயம் ரவியை வைத்து கோமாளி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. 10 கோடியில் உருவான அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடியை அள்ளியது.

அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற படத்திலும், ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் ஆகிய படங்களிலும் நடிக்க துவங்கினார். இதில், டிராகன் படம் முடிந்து கடந்த 21ம் தேதி வெளியானது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவை பார்த்த பலரும் இது டான் படம் போலவே இருப்பதாக சொன்னார்கள்.

ஆனால், இந்த படத்தின் கதை வேறு. நீங்கள் டிரெய்லரில் பார்த்தது முதல் அரைமணி நேரத்தில் வரும் காட்சிகள்தான். டிராகன் படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என சொன்னார் அஸ்வத் மாரிமுத்து. படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. படம் நன்றாக இருப்பதாகவும், அஸ்வத் மாரிமுத்து அமைத்திருந்த திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்ததாகவும் ரசிகர்கள் சொன்னார்கள்.


எனவே, ரிலீஸான முதல்நாளே இந்த படம் ஹிட் என்பது தெரிந்துவிட்டது. தற்போது ஆந்திராவிலும் இப்படத்தை புரமோஷன் செய்ய படக்குழு கிளம்பியிருக்கிறது. மேலும், இப்படத்தை வெற்றி பெறச்செய்த ரசிகர்களுக்கு பிரதீப்பும், அஸ்வத் மாரிமுத்தும் நன்றி சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டிக்கெட் புக்கிங்கை விட பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் டிக்கெட் புக்கிங் 2 மடங்கு இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் கூறியிருக்கிறார்கள். அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

வழக்கமான பாணியிலிருந்து விலகி ரசிகர்களை நம்பி ஒரு நல்ல கதையை எடுப்போம் என அஜித் களமிறங்கி நடித்த படம்தான் விடாமுயற்சி. ஆனால், அஜித் நினைத்தது நடக்கவில்லை. தமிழ்நாட்டில் இப்படம் 80 கோடியை மட்டுமே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டிராகன் படத்தோடு தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெளியானது. ஆனால், டிராகன் அளவுக்கு அந்த படத்தின் வசூல் இல்லை.

Tags:    

Similar News