விஜய் அரசியலுக்கு அழைத்தால் வருவீங்களா? பார்த்திபன் சொன்ன அட்ராசக்கை பதில்

By :  Sankaran
Update:2025-02-23 12:54 IST

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி பாசிடிவான பல பேட்டிகளில் பேசி இருக்கீங்க. அவரிடம் இருந்து அழைப்பு வந்தா அந்தக் கட்சியில் இணைய வாய்ப்பு இருக்கான்னு கேட்கிறார். அதற்கு பார்த்திபன் சொன்ன பதில் இதுதான்.

நான் போக மாட்டேன்: டைட்டானிக்ல எடுத்த உடனே கப்பல் கவிழ்ந்துருச்சுன்னு காமிச்சிட்டு அதுக்கு அப்புறமா படத்தை ஆரம்பிப்பாங்க. அந்தமாதிரி அந்தக் கேள்விக்குப் பதிலை சொல்றேன். மிஸ்டர் விஜயை வாழ்த்துறேன். அவர் என்னைக்குக் கட்சிக்குக் கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன். இதுவரைக்கும் நிறைய கட்சிகளுக்குக் கூப்பிட்டுருக்காங்க. எந்தக் கட்சிக்கும் நான் போக மாட்டேன்.

என்னுடைய அரசியல் என்பது இதெல்லாம் இல்லாத அரசியலா இருக்க நான் ஆசைப்படுறேன். கூட்டணி வைக்கிறதைப் பொருத்துத்தான் வெற்றி வாய்ப்பு. மக்கள் திலகம் எம்ஜிஆர் கூட்டணி வச்சா கூட பெரிசா ஜெயிச்சிட்டு வந்தாரு. விஜய் கூட இதுவரைக்கும் நான் எந்த ஒரு படமும் ஒர்க் பண்ணல.

கவிதை கொடுத்தேன்: அழகிய தமிழ்மகன் படத்துல கேட்டாருன்னு என்னுடைய கவிதைகளை எழுதிக் கொடுத்தேன். அவருக்கிட்ட இருந்து இதுவரைக்கும் எந்தவிதமான ஃபேவரையும் அனுபவிச்சது கிடையாது. இன்னும் சொல்லப்போகணும்னா நான் ஏதோ ஒரு இடத்துல அவருக்கிட்ட கேட்டேன். இந்தமாதிரி பண்ண முடியுமான்னு? அதுக்கு உங்களுக்குத் தெரியும்ல சார். நான் இந்தமாதிரி எல்லாம் பண்ண மாட்டேன்னு. அந்தமாதிரி அவரு தவிர்த்துருக்காரே தவிர அவரால எந்த ஒரு ஃபேவரையும் அனுபவிச்சது கிடையாது.


இனிமே அனுபவிக்கப்போறதும் கிடையாது. ஏன்னா இது கடைசி படம்னுட்டாரு. அதனால எந்த நோக்கமும் இல்லாம ஜனநாயகத்துல யாரு வேணாலும் அரசியலுக்கு வரலாம். அப்படி வந்த ஒருவர் ஆளும்கட்சியைத்தான் எதிர்க்கணும்.

அப்போதான் அவருக்கு பேரு. விஜயகாந்த் சாருக்கு எதுக்காக பேரு வந்தது? அப்படின்னு சிங்கம்னு சொல்லக்கூடிய ஜெயலலிதா அம்மாவை வந்து டமால்னு ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட்ல மாத்துனாரு. போட்டி இல்லாம விஜய் வர முடியாது.

பாராட்ட வேண்டிய விஷயம்: அப்படி வர்றதுல பிரயோஜனமே இல்ல. ஓட்டப்பந்தயத்துல ரெண்டே ரெண்டு பேரு ஓடி பர்ஸ்ட் பிரைஸ், செகண்ட் பிரைஸ் வாங்கறதுல என்ன பிரயோஜனம்? அதனால எல்லா எதிர்ப்பும் கரெக்டான விஷயம். அவரு வர்றாரா? 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு வர்றாருன்னா அது பாராட்ட வேண்டிய விஷயம்.

கமெண்ட்: அதுதான் நான் பார்க்குறது. இதுக்கு பின்னாடி எந்த குதர்க்கமான யோசனையும் எனக்கு இல்ல. அதுலயும் கமெண்ட்ல ஒருத்தன் போட்டுருக்கான். 200 கோடியை விட்டுட்டு 20 ஆயிரம் கோடிக்குலாங்க அவரு பிளான் பண்றாருன்னு. அது எனக்குத் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News