அதிசயமே அதிசயம் ஜீன்ஸ்… இதுவரை ரசிகர்கள் மிஸ் செய்த சூப்பர் சுவாரஸ்ய சம்பவம்!

By :  Akhilan
Update:2025-02-23 18:30 IST

Jeans: சினிமாவில் இன்றளவும் முக்கிய படைப்பாக இருக்கும் ஜீன்ஸ் திரைப்படத்தில் ரசிகர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத சில சுவாரசிய தகவல் அடங்கிய தொகுப்புகள் தான் இது.

இரட்டையர்களின் தந்தையான நாச்சியப்பன் தன்னுடைய இரட்டை சகோதரருக்கு தனக்கும் வேறு வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டது பிரச்சினையாக அமைந்தது. இதனால் தன்னுடைய இரட்டை மகன்களுக்கு இரட்டைப் பெண்களை தேடுகிறார்.

அந்த நேரத்தில் முதல் மகன் விஸ்வநாதனுக்கும் மதுமிதா வேடத்தில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கும் காதல் வந்துவிடுகிறது. அவர்கள் காதலை சேர்த்து வைக்க நடக்கும் கலாட்டா தான் மொத்த படமும். சிம்பிளான கதையில் தன்னுடைய பிரமாண்டத்தை சங்கர் சேர்த்து அசத்தியிருப்பார்.

அந்த காலகட்டத்திலேயே 17 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் 35 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. நடிகை ஸ்ரீதேவியின் தாய்க்கு மூளையில் செய்த தவறான ஆப்ரேஷனை இப்படத்தில் சங்கர் இணைத்து இருப்பார்.

1993 ஆம் ஆண்டு ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் செய்யப்பட்ட விஎஃப்எக்ஸ் பணிகளை விட ஜீன்ஸ் படத்தில் செய்யப்பட்ட கிராபிக்ஸ் பணிகள் அதிகம். அதிசயம் பாடலில் ஐஸ்வர்யாராயின் உடைகள் அந்தந்த நாட்டு ராணியை பிரதிபலிப்பாக அமைந்திருக்கும்.

கொலம்பஸ் பாடல் பாண்டிச்சேரி கடற்கரையில் தோட்டாதரணியால் படமாக்கப்பட்டது. ஃபெஃப்சி பிரச்சினையால் தோட்டாதரணி படத்தில் பாதியிலிருந்து விலக பாலா மீதி படத்தை எடுத்துக் கொடுத்தார். நாசர் கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானவர் கவுண்டமணி.

எஸ் வி சேகர் கேரக்டரில் முதலில் தேர்வானவர் எஸ் பி பாலசுப்ரமணியம். ஐஸ்வர்யாராயின் அம்மாவாக நடித்த ஜானகிக்கு அவரைவிட நான்கு வயது தான் அப்போதே அதிகம். முதல்முறையாக தமிழ் சினிமாவில் இரட்டையர்கள் காட்சிகள் அவ்வளவு நுணுக்கமாக கையாளப்பட்டது ஜீன்ஸ் திரைப்படத்தில் தான்.

இப்படத்தின் ஆடியோ கேசட் ஜீன்ஸ் உடையில் வைத்து வெளியிடப்பட்டது. முதல்முறையாக இப்படம் தான் தயாரிப்பாளர்களால் நேரடியாக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News