தளபதியை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் டிராகன் நடிகர்… கொஞ்சம் ஓவரா ஆடாதீங்கப்பா!
Pradeep Ranganathan: தமிழ் சினிமாவின் முக்கிய படமாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் டிராகன் ஹிட்டடித்து இருக்கும் நிலையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய ட்வீட்டுகள் தற்போது வைரலாகி வருகிறது.
கோலிவுட்டில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் கோமாளி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. ஜெயம் ரவியின் திரை கேரியரையே மாற்றிய படம் இதுவென்று கூட சொல்லலாம்.
தொடர்ந்து அவர் இயக்கத்தில் லவ் டுடே உருவானது. ஆனால் பிரபல நடிகர்கள் யாருமே நடிக்க முன் வராமல் போனதால் அவரே அந்த படத்தில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து அவருடைய ஹீரோயினாக இவானாவும் நடித்திருந்தினர். படம் 2கே கிட்ஸுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பிடித்தமானதாக அமைந்தது.
இதையடுத்து அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். லவ் டுடே வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனின் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்தது. இப்படம் சமீபத்தில் ரிலீஸாக வெற்றி நடைபோட்டு வருகிறது.
இதனால் மீண்டும் பிரதீப் ரங்கநாதனின் படத்தினை அஸ்வத் மாரிமுத்து மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர இருக்கிறார். டிராகனும் மிகப்பெரிய அளவில் தற்போது வெற்றி வாகை சூடி வருவதால் பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ந்து புகழ் சேர்ந்து வருகிறது.
ஆனால் அவர் பழைய ட்வீட்கள் அவருடைய புகழை சோதிப்பது போல அமைந்து இருக்கிறது. அந்த வகையில் அவர் விஜயை குறித்து விமர்சித்து இருக்கும் பழைய ட்வீட்டுகள் வரிசையாக வெளியாகி தளபதி ரசிகர்களை கடுப்படித்து வருகிறது.
விஜயின் ஜில்லா படத்தினை சுறா2 என கலாய்த்த நிலையில் தற்போது லிங்கா படத்துக்கு 3 நாட்களுக்கு டிக்கெட்டே இல்லை. ஆனால் கத்தி படத்துக்கு டிக்கெட்டே முதல் நாள் காத்தாடிக்கொண்டு இருந்ததாக கலாய்த்து இருக்கிறார். அவர் இப்படி ஹீரோ ஆவாருனு தெரிஞ்சா ஏன் இப்படி பேசி இருக்க போறாரு.
எல்லாம் விதி. தேவையே இல்லாமல் பேசி இப்போ ரசிகர்களிடம் சிக்கி அடி வாங்கி கொண்டு இருக்கிறார் என கலாய்ப்புகளும் எழுந்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் டிராகனையும் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.