96 பட இயக்குனரை பளார் என்று அறைந்த பெண்மணி.. இந்த விஷயத்துக்காக?.. அடப்பாவமே!..
இயக்குனர் பிரேம்குமார்: இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்து 2018 ஆம் ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் 96. பள்ளி பருவத்தில் பள்ளி காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களின் பெயர் ராம் ஜானு என்று வைக்கப்பட்டிருந்தது.
இந்த பெயரை பலரும் மறக்கவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப்படம் நம்மை பள்ளி காலத்து நினைவுகளுக்கே அழைத்துச் செல்வது போன்ற ஒரு தாக்கத்தை உருவாக்கியிருந்தது 96 திரைப்படம். ராம் ஜானு என்கின்ற இந்த பெயரை இப்போது கேட்டாலும் ஒரு விதமான நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய புகழை பெற்றார் இயக்குனர் பிரேம்குமார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகன் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படம் வெளியான சமயத்தில் 96 திரைப்படத்தின் இயக்குனர் இயக்கிய படம் என்று மிகவும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
ஆனால் படம் வெளியாகி அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தோல்வியை சந்தித்தது. இதனால் இயக்குனர் பிரேம்குமார் அடுத்ததாக 96 திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார். அதாவது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் த்ரிஷா-விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இவ்விடத்தில் இரண்டாவது பாகத்தை உருவாக்குவதற்கு பிரேம்குமார் திட்டமிட்டு இருக்கின்றார்.
இது தொடர்பான தகவல் சமீப நாட்களாக வெளிவந்திருந்த நிலையில் அதனை இயக்குனர் பிரேம்குமார் சமீபத்திய பேட்டியில் உறுதி செய்திருக்கின்றார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிரேம்குமார் தெரிவித்திருந்ததாவது '96 திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கு கதை எழுதி வருகின்றேன். இதற்காக கொச்சியில் தங்கி படத்தின் ஸ்கிரிப்ட்-ஐ எழுதி வருகின்றேன்.
மேலும் இந்த திரைப்படத்தின் தாக்கம் தற்போது வரை ரசிகர்களிடையே நீங்காமல் இருந்து வருகின்றது. படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ஒரு வயதான பெண்மணி தன்னை அழைத்தார். அப்போது அவர் என்னை பாராட்டத்தான் அழைக்கிறார் என்று நம்பி சென்றேன். திடீரென்று என்னை ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார். அது எனக்கு வலிக்கவில்லை இருந்தாலும் கஷ்டமாக இருந்தது.
ஏன் அறைந்தார் என்பது எனக்கு புரியவில்லை. பின்னர் கொஞ்ச நேரம் கழித்து மற்றொரு கன்னத்தில் எனக்கு முத்தம் கொடுத்தார். அது நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுதான் புரிந்து கொண்டேன் அவருக்கு அந்த திரைப்படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை இரண்டாவது பாகமும் அதுபோல இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் கதையை பார்த்து பார்த்து எழுதி வருகின்றேன் என்று தெரிவித்திருந்தார்.
இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. விரைவில் 96 திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விஜய் சேதுபதி மிகவும் பிஸியாக நடித்து வருவதால் அவரது கால்சீட் கிடைக்காமல் தான் படத்தின் இரண்டாவது பாகம் தள்ளிப் போய் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இயக்குனர் விரைவில் இப்படம் உருவாகும் என்று தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.