சூர்யா 45-ல ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறாரா?.. படத்துக்கு ரீரெக்கார்டிங்கே தேவையில்ல போலயே..
நடிகர் சூர்யா: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை அடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் அடி வாங்கியது.
கங்குவா திரைப்படத்திற்காக 2 ஆண்டு மெனக்கட்டு நடித்திருந்தார் நடிகர் சூர்யா. இதனால் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் முழுக்க முழுக்க கங்குவா படத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இப்படத்தின் தோல்வி நடிகர் சூர்யாவை பெரிதளவில் பாதித்திருக்கின்றது.
சூர்யா 44:
கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. மேலும் பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை இருக்கின்றது.
சூர்யா 45:
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் நடிகை த்ரிஷா இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கின்றார். கிட்டதட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடித்து வருகின்றது.
இதனால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. இது திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் ஜெய் பீம் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களிலும் நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்திலும் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஆர்.ஜே பாலாஜியும் இது திரைப்படத்தில் வக்கீலாக தான் நடித்திருக்கின்றார். இந்த செய்தியை கேட்ட சினிமா விமர்சகர்கள் பலரும் ஆர் ஜே பாலாஜியும், நடிகர் சூர்யாவும் மிகச் சிறப்பாக பேசக்கூடியவர்கள். அனேகமாக இந்த திரைப்படத்திற்கு ரீரெக்கார்டிங்கே தேவையில்லை என்று கூறி வருகிறார்கள் .அதுமட்டுமில்லாமல் ஆர்.ஜே பாலாஜியின் கதாபாத்திரத்தின் பெயர் பேபி கண்ணன் என்று கூறப்பட்டுள்ளது.