விஜய் கொடுத்த வாக்கு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் மோகன்லால்.. செய்வாரா?
மோகன்லால்:
சமீபத்தில் நடிகர் விஜய் பற்றி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கூறிய ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 40 வருடங்களை கடந்து இப்பொழுதுதான் மோகன் லால் முதன்முதலாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஃபெரோஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் முற்றிலுமாக குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
3d தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. ஒரு பேன் இந்தியா திரைப்படமாக அந்த படம் உருவாகி இருப்பதால் இந்தியா முழுவதிலும் மோகன்லால் பயணம் மேற்கொண்டு படத்தை ப்ரொமோட் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த மோகன்லால் அவருடைய பல அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் படங்கள்:
சுகாசினியுடனான ஒரு பேட்டியில் அவர் பேசும்போது விஜய் பற்றி ஒரு தகவலை கூறி இருக்கிறார். விஜயும் மோகன்லாலும் இணைந்து ஜில்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். தமிழில் மோகன்லால் நடித்த முதல் தமிழ் படம் இருவர். அதன் பிறகு ஜில்லா, எனக்குள் ஒருவன், கடைசியாக வெளியான ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார்.
சொல்லிக் கொள்ளும் படி பெரிதாக தமிழில் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜில்லா திரைப்படத்தின் போது விஜய்க்கு அவரே தோசை சுட்டுக் கொடுத்ததாகவும் அந்த தோசை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் மோகன்லால் கூறியிருந்தார். சமீபத்தில் கூட விஜய்யை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் ஷூட்டிங்கில் இருந்தாராம்.
விஜய் கொடுத்த வாக்கு:
தான் இயக்கிய ஃபெரோஸ் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என மோகன் லால் கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் கண்டிப்பாக வந்து பார்க்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறாராம். இதைப்பற்றி தான் அந்த பேட்டியில் மோகன் லால் பேசியிருந்தார். தமிழில் பல வாய்ப்புகள் மோகன்லாலை தேடி வந்திருக்கிறது. ஆனால் அது எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லையாம். அதனாலயே அந்த படங்களை எல்லாம் மறுத்துவிட்டேன் என மோகன் லால் கூறியிருந்தார்.