குஷில கோட் சூட்லாம் போட்டு சுத்திட்டு இருக்காரு.. விடாமுயற்சிக்கு மீண்டும் சிக்கலா?

By :  Rohini
Update: 2024-12-25 12:06 GMT
vidamuyarchi

எப்படியோ விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதைவிட அதிக உற்சாகத்தில் அஜித் இருப்பதாகவே தெரிகிறது. சமீபகாலமாக அவரின் புகைப்படங்கள் இணையத்தை அலங்கரித்துக் கொண்டு வருகின்றன.

இதுவரை இல்லாத அளவு ஏகப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் என அஜித் சம்பந்தமான எல்லாவித அப்டேட்டுகளும் அவ்வப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் கூட அவர் உடல் எடை மெலிந்து மிகவும் ஸ்லிம்மாக தோன்றி படு ஸ்டைலாக இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் அஜித்.

ரிலீஸ் தேதி ஒரு பக்கம் நெருங்கிக் கொண்டிருக்க இதுவரை படத்தின் டிரைலரோ எந்தவித பாடலும் வெளியாகவில்லை. ஆனால் ட்ரெய்லர் ஜனவரி ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதைப்போல படத்தின் முதல் சிங்கள் டிசம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஆனால் படத்தை பற்றிய இன்னொரு தகவலும் வெளியாகிக் கொண்டு வருகின்றன.


அதாவது ஏற்கனவே விடா முயற்சி திரைப்படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல் என அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே அந்த படக்குழுவிடமிருந்து விடாமுயற்சி டீம் ரைட்ஸ் வாங்க வில்லை என்றும் பிரேக் டவுன் பட தயாரிப்பு நிறுவனம் அதற்காக 100 கோடி இழப்பீடு கேட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. இவ்வளவு பெரிய பேனரில் அதுவும் அஜித் படம் என்னும்போது ரைட்ஸ் வாங்காமல் இருப்பார்களா?

ஏற்கனவே அந்த பட தயாரிப்பு நிறுவனத்திடம் விடாமுயற்சி படக்குழு பேசி ரைட்சை வாங்கி இருக்கிறார்கள் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறி வந்தார். ஆனால் இப்போது வந்த தகவலின் படி இந்த பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லையாம். நூறு கோடி கேட்ட நிலைமையில் இப்போது 30 கோடி வரைக்கும் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருக்கிறதாம். இது நல்ல முறையில் முடிந்தால் ஒழிய விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Tags:    

Similar News