விலை போனதா பிக்பாஸ் டைட்டில்?… ரசிகர்கள் யோசிக்காத வகையில் நடக்கும் பித்தலாட்டம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பிரச்னை

By :  Akhilan
Update: 2024-12-25 16:30 GMT

பிக் பாஸ் தமிழ் 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் அதிகம். முதலில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் விலகினார். அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் தேர்வு மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. சின்னத்திரை நடிகர்களை உள்ளே அழைத்து வந்து பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆர்வத்தை குறைத்தனர்.

அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி தொடக்கத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவு, போட்டியாளரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தற்போதையெல்லாம் அவர் கேள்வி கேட்பதைவிட முகத்தில் அடிப்பது போல பேசுவதை தான் வழக்கமாக வைத்திருக்கிறார். இது பார்க்கும் ரசிகர்களுக்கு கோபத்தை தூண்டுவதாக அமைகிறது.

இது ஒரு புறம் இருக்க நிகழ்ச்சியில் பெரிய அளவில் கன்டென்டுகளும் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த இரண்டு வாரமாக தான் வார டாஸ்க்குகள் நடத்தப்பட்டு ரசிகர்கள் ஓரளவு நிகழ்ச்சியை பார்க்கும் வண்ணமாக வைத்துக் கொண்டு வருகிறது தயாரிப்பு குழு.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியில் நிறைய போட்டியாளர்கள் தங்களுக்கு பிஆர்யை வெளியில் செட் செய்து விட்டு வந்திருப்பதால் நிகழ்ச்சியின் மீதுள்ள நம்பிக்கை தன்மை ரசிகர்களுக்கு குறைந்து இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில், சௌந்தர்யா மற்றும் ரானவிற்கும் மட்டுமே அதிக அளவிலான பிஆர் வேலைகள் நடந்து வருகிறது.

தற்போது மேலும் ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது. பிக் பாஸ் டைட்டிலை வென்ற போட்டியாளர்கள் ARM என்ற வரிசையில் தான் இதுவரை தட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சீசன் வெற்றியாளர் அர்ச்சனா என்பதால் இந்த சீசன் வெற்றியாளர் பெயர் Rல் தொடங்கலாம்.

இதை ரசிகர்கள் யோசித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் நிகழ்ச்சிக்குள் இருந்து ரானவ் இதை கூறிக்கொண்டு இருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் இதை கலாய்க்கும் போது நான் எதை மறைத்து வைக்க நினைக்கிறேன் ஏனோ அதையே பேசிக்கொண்டு இருக்கிறான் என அவர் கூறுவதும் தற்போது சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.

ஏற்கனவே ரசிகர்கள் விருப்பம் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தி வரும் தயாரிப்பு கூட இந்த பேட்டர்னை மாற்ற விரும்பாமல் ரானவிற்கே டைட்டிலை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் இந்த சீசனில் ரசிகர்கள் பெரிய அளவில் ஒரே போட்டியாளருக்கு இதுவரை எந்த ஆதாரமும் கொடுக்காததால் இது பெரிய அளவில் பலருக்கு சந்தேகத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.

Also Read: விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை நான் ஏன் சரி செய்றேன்னு தெரியுமா? விஜயகாந்தோட பெரிய மனசைப் பாருங்க..!


Tags:    

Similar News