என் புருஷனை பத்தி உங்களுக்கு தெரியுமா? அருணை பிக்பாஸில் விளாசிய தீபக் மனைவி
பிக்பாஸில் குடும்ப சுற்றில் தீபக்கின் மனைவி
Biggboss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அருண் தன்னுடைய கணவர் தீபக் குறித்து பேசியதை கடுமையாக சாடி இருக்கிறார் அவர் மனைவி சிவரஞ்சனி. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் முதல் குடும்பமாக தீபக் மனைவி மற்றும் மகன் காலையிலேயே உள்ளே வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்த தீபக் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.
தொடர்ந்து சிவரஞ்சனி உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை சொல்லி வந்தார். இப்படி ஒவ்வொருவரும் பற்றியும் சிவரஞ்சனி கூறிய போது பெருமளவில் நல்ல விஷயங்களே இடம்பெற்று இருந்தது.
ஆனால், முரண்பாடு குறித்து பேசும்போது அருண் பிரசாத்தை பிரித்து மேய்ந்தார். இந்த இடத்தில் நான் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பாக பயன்படுத்த அவசியமில்லை. அருண் மற்றும் தீபக்கிடையே முரண்பாடு இருப்பது உண்மைதான்.
ஆனால் அருண் ஒரு முறை சத்யாவிடம் தீபக் குறித்து பேசியது என்னை தனிப்பட்ட வகையில் பாதித்தது. ட்ரெண்டிங் ஹீரோவாக இருக்கும் என்னையே இப்படி நடத்துகிறார். இவர் ட்ரெண்டிங் ஹீரோவாக இருந்தபோது அவருடன் இருந்தவர்களை எப்படி நடத்தி இருப்பார். அசிஸ்டன்ட் எல்லாம் பாவப்பட்டு இருப்பார்கள் என பேசி இருந்தார்.
நமக்கு ஒருவர் மீது கோபம் வருவது சாதாரணம்தான். ஆனால் அப்பொழுது நடந்த விஷயம் பற்றி கூறாமல் நமக்கு தெரியாத நாம் பார்க்காத ஒரு விஷயம் பற்றி பேசுவது எந்த வகையில் சரியா இருக்கும். தீபக் எப்படிப்பட்டவர் என்பது முழுதாக புரிந்து கொள்ளாமல் அருண் பேசியது நியாயமாக இருக்காது.
இப்போது இருக்கும் சீரியல் ஹீரோக்களிடம் இருக்கும் பொறாமை கூட தீபக் இருந்த சமயத்தில் இல்லை. அவருடன் அப்பொழுது பிரபல நாயகர்களாக இருந்த சஞ்சீவ், வெங்கட் எல்லாரும் இன்னுமும் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.
எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டு அவனுக்கு கிடைக்கவில்லை என நாங்கள் பேசியதே இல்லை. இது குறித்து அருண் பேசும் போது தீபக்கை பற்றி தெரியாமல் அவர் பேசியது என்னை மேலும் வருத்தப்பட வைத்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read: சூர்யாவுக்கும் பாலாவுக்கும் என்ன தான் பிரச்சனை? யார் மேல தப்பு? பிரபலம் சொல்ற தகவல்