Biggboss Tamil: டிரெஸை வைத்து ஜாக்குலின் செய்யும் தில்லாலங்கடி… லைவில் உண்மையை சொன்ன பவித்ரா…
பிக்பாஸ் அப்டேட்ஸ்
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு பெரிய அளவில் கண்டென்டுகள் கிடைக்காமல் போக தற்போது உள்ளே வந்திருக்கும் போட்டியாளர்கள் விளையாடாமல் டைட்டில் தட்டிச் செல்ல வழி தேடி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாராலும் தொடர்ச்சியாக கேமராக்கு முன்னால் நடிக்க முடியாது என்பது தான் முக்கிய விஷயமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் உள்ளே வந்த எல்லா போட்டியாளர்களும் சின்னத்திரை நடிகர்கள் தான். ஒரு மாதத்தில் தங்களுடைய அதிகபட்ச நாட்களை கேமராக்கு முன்னால் நிற்கும் இவர்களால் 100 நாட்களுக்கு சமாளிக்க முடியாதா எனக் கேள்வி அப்போதே எழுந்தது.
இதைத்தொடர்ந்து உள்ளே வந்த போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியான எந்த விஷயத்தையும் நிகழ்ச்சிக்குள் செய்யவில்லை. ஒருவர் குறித்து இன்னொருவர் தேவையில்லாமல் பேசி ரசிகர்களை வெறுப்படைய செய்ததுதான் அதிகம். அது மட்டுமல்லாமல் இந்த முறை போட்டியாளர்கள் நிறைய பேருக்கு பிஆர் வேலைகளும் வெளியில் நடந்து வருகிறது.
இப்படி போட்டி போட்டு வெல்லாமல் காசை கொடுத்து வெளியில் பேச வைத்து டைட்டிலை தட்ட தற்போது சில போட்டியாளர்கள் ஒரு பக்கம் காய் நகர்த்தி வருகின்றனர். அதிலும் அருண் பிரசாத், சௌந்தர்யா உள்ளிட்டோருக்கு பிஆர் வேலைகள் வெளியில் பலமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் நடந்த குடும்ப டாஸ்க் ஜாக்குலினின் தோழி உள்ளே வந்த போது ட்ரஸ் குறித்து பேசும்போது அவரின் முகம் சுணங்கியதாக போட்டியாளர் பவித்ரா கவனித்து பேசி வருகிறார். வார வாரம் அனுப்பப்படும் டிரஸ்ஸில் வெளியில் தங்களுக்கு எப்படி பெயர் இருப்பதை குறிக்கும் விதமாக ஜாக்குலின் அனுப்ப சொல்லி இருக்கலாம் என பவித்ரா சந்தேகப்பட்டு இருக்கிறார்.
கடந்த சீசனில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திய மாயாவை விட ஜாக்குலின் இந்த சீசனில் எதுவுமே செய்யவில்லை. ஆனாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். தற்போது பவித்ராவின் இந்த கூற்றுப்படி பார்த்தால் அவரும் பி ஆரை செட் செய்துவிட்டு தான் உள்ளே வந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
உண்மையான ரசிகர்களை வைத்து டைட்டிலை தட்டி செல்லாமல் டி ஆரை உள்ளே விட்டதிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஆட்டம் கண்டு வருகிறது. இது இப்படியே தொடர் பட்சத்தில் இன்னும் சில சீசனங்களில் தன்னுடைய மொத்த பாப்புலாரிட்டியையும் இழக்கும் என கணிக்கப்படுகிறது.
Also Read: இனி காதல் மட்டும்தான்!..'ரெட்ரோ' லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?..