சிவகார்த்திகேயன் ஈசியா இந்த இடத்துக்கு வரல!.. இது அற்புதம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!...
Sivakarthikeyan: திருச்சியை சேர்ந்த பையன்தான் சிவகார்த்திகேயன். இவரின் அப்பா காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே அவரின் அப்பா இறந்துவிட அப்பாவை போல நாமும் போலீஸ் ஆக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால், அவரின் அம்மா அதை அனுமதிக்கவில்லை.
சிவகார்த்திகேயனுக்கு காமெடி பிடித்துப்போக மிமிக்ரி கலைஞராக மாறினார். பல இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து இருக்கிறார். அதன்பின் விஜய் டிவியில் ஆங்கராக வேலைக்கு சேர்ந்து சில வருடங்கள் வேலை செய்தார். அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசையும் வர அதிலும் நுழைந்தார்.
சிவகாத்திகேயனுக்கு எந்த சினிமா பின்புலமும் இல்லை. எனவே, பல இடங்களில் சென்று வாய்ப்பு கேட்டார். தனுஷின் அறிமுகம் கிடைக்க 3 படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். அதன்பின் மெரினா படத்தில் வாய்ப்பு வந்தது. தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல் படமும் பேசப்பட்டது. ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் வெற்றி அவரை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது.
மிகவும் குறுகிய காலத்தில் தனக்கு முன் சினிமாவுக்கு வந்த சீனியர் நடிகர்களை ஓரம் கட்டி அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறினார். அவரின் வளர்ச்சியை பார்த்து பல சீனியர் நடிகர்களும் பொறாமைப்பட்டனர். இதை அஜித்தே அவரிடம் சொல்லி இருக்கிறார்.
தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் அவரின் சம்பளம் 60 கோடியை தாண்டி இருக்கிறது. புதிதாக நடிக்கும் படங்களுக்கு அவர் 70 கோடி சம்பளமாக கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஊடகம் ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றி பேசினார்.
என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும் நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். அவரோட உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. நிமிடத்திற்கு நிமிடம் உழைத்துதான் அவர் இப்போது இருக்கும் பெரிய இடத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு தகப்பனாக நடித்திருக்கிறேன். ஆனால், அவர் தனது சொந்த வாழ்வில் தனது தகப்பனை பறிகொடுத்து தானாக கையை ஊன்றி வந்து இப்போது நிற்கும் இடம் அற்புதம்’ என ஃபில் பண்ணி பேசியிருக்கிறார்.