இந்தியாவின் டாப் 5 வசூல் திரைப்படங்கள்… கோலிவுட்டில் ஒரு ஹீரோ கூட இல்லையே… கஷ்டமப்பா!..
அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள்
India Top Grosser: இந்தியாவில் வெளியாகி அதிக அளவில் வசூல் குவித்த டாப் 5 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில், இதில் கோலிவுட்டின் ஒரு திரைப்படம் கூட இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியான உண்மையாக மாறி இருக்கிறது.
சினிமா துறையில் தென்னிந்திய சினிமாவிற்கு தனி இடம் உண்டு. அதிலும் தமிழ் திரையுலகம் பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக அதை தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகம் கட்டி தூக்கி தமிழை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
அந்த வகையில் தமிழை தவிர்த்து மற்ற மொழிகளில் தற்போது ஃபேன் இந்தியா திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதனால் இதன் வசூலும் ஆயிரம் கோடியை தாண்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
புஷ்பா 2
இந்த பட்டியலில் முதலிடத்தில் புஷ்பா 2 இடம்பெற்றிருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் குவித்தது. அது மட்டுமில்லாமல் இப்படத்தின் முதல் நாள் காட்சியில் நடந்த பிரச்சினையால் மேலும் வசூல் சூடு பிடித்தது. 21ம் நாள் முடிவில் இப்படத்தின் வசூல் 1705 கோடியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாகுபலி 2
இதில் இரண்டாம் இடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 இடம் பெற்று இருக்கிறது. இத்திரைப்படத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் படத்தின் முதல் பகுதி மிகப்பெரிய கேள்வியை விட்டு சென்றது.
இதன் காரணமாகவே தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக அளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஆர்வத்துடன் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மொத்த வசூலாக 1408 கோடி ரூபாயை பாகுபலி 2 குவித்து இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது.
கேஜிஎஃப்2
கன்னட சினிமாவின் முதல் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது கேஜிஎஃப். யாஷ் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம் வசூல் வேட்டை நடத்தி 995 கோடியுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இத்திரைப்படம் ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த பாட்டு காண ஆஸ்கார் விருதையும் பெற்றது. தொடர்ந்து வசூல் சாதனை படைத்து 915.85 கோடியுடன் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது.
பதான்
பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 543 கோடியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. முதல் ஐந்து பட்டியலில் எந்த ஒரு தமிழ் படமும் இல்லை என்பது வருத்தமான உண்மை.
Also Read: இனி காதல் மட்டும்தான்!..'ரெட்ரோ' லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?.