தேவையில்லாம கத்தாதிங்கடா!.. தல ஃபேன்ஸை நேரடியா அட்டாக் பண்ண விஜய் சேதுபதி!..
நடிகர் விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வளம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். சமீப நாட்களாக தொடர்ந்து அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.
அதிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்த விஜய் சேதுபதி தன்னுடைய 50வது படமான மகாராஜா திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது சைனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விடுதலை திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகர் விஜய் சேதுபதி.
இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் 2வது பாகம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்த திரைப்படத்தில் பெருமாள் வாத்தியார் என்கின்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த திரைப்படத்தில் அவர் ஒரு போராளியாக எப்படி மாறினார் என்பதை எடுத்துக் கூறும் விதமாக கதை அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
அடுத்ததாக தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் அவரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது விஜய் சேதுபதி ஒரு மேடையில் பேசி வருகின்றார். அப்போது தல என்கின்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டு ஏதோ கூற வருகின்றார்.
ஆனால் அதற்குள் தல என்கின்ற வார்த்தையை கேட்டவுடன் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் பலரும் கத்த தொடங்கி விட்டார்கள். இதனால் டென்ஷனான விஜய் சேதுபதி 'தேவையில்லாம கத்தாதிங்கடா டேய்.. என்ன பேச வராங்கன்னு தெரியாம கத்துறீங்க'.. என்று கோபமாக கூறி விடுகின்றார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் விஜய் சேதுபதியை திட்டி தீர்த்து வருகிறார்கள்.