ஃபர்ஸ்ட் விட இப்ப கொள்ள லாபம் இருக்கு!.. சச்சின் ரீரிலீஸ்.. எப்பன்னு தெரியுமா?..

By :  Ramya
Update: 2024-12-28 06:56 GMT

sachin

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பதால் சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்து விட்டாலும் ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்தார். அதையெல்லாம் தகர்த்தெறிந்து ஒவ்வொரு படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்து வருகின்றார். தற்போது தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தளபதி 69: ஹச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மம்தாபைஜு, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிறகு படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கும் என்று கூறப்படுகின்றது.


அரசியல் கட்சி: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்கியிருந்தார். இந்த கட்சி மூலமாக வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த விஜய் அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையுமே மிகச் சிறப்பாக செய்து முடித்திருந்தார். ஒரு பக்கம் சினிமா மற்றொரு பக்கம் அரசியல் வேலைகள் என அனைத்தையும் சரியாக செய்து வருகின்றார்.

ரீ ரிலீஸ் படங்கள்: நடிகர் விஜய் தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வருவது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால் இந்த கவலையை சரி செய்வதற்கு விஜயின் பல ஹிட் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடைசியாக கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருந்தார்கள்.

இதற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருந்தார்கள். திரையரங்குகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று திருவிழா போல கில்லி ரீ ரிலீஸ் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் சச்சின்.

இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் வெளியானது. சந்திரமுகி திரைப்படத்துடன் சச்சின் திரைப்படம் வெளியான காரணத்தால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .இருப்பினும் இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகின்றது.


அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் தாணு முடிவு செய்து இருக்கின்றார். இதனை தனது பேட்டியில் கூறியிருந்த அவர் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆக போகிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் மாதம் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். முதன் முதலில் வெளியான போது கிடைத்த வரவேற்பை காட்டிலும் இந்த முறை கொள்ள லாபம் வரப்போகுது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பேசியிருந்தார்.

Tags:    

Similar News