படமெல்லாம் வேணாம்… ஆளையே தூக்கு… பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் தமிழ் ஹிட் இயக்குனர்…
பாலிவுட் பக்கம் செல்லும் இயக்குனர்கள்
Akshaykumar: பாலிவுட்டில் வரிசையாக தமிழ் இயக்குனர்கள் என்ட்ரி கொடுக்கும் நிலையில் தற்போது அடுத்து இயக்குனராக முக்கிய பிரபலம் உள்ளே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா இயக்குனர்கள் தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமடைந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தற்போது பல மொழிகளில் அதிகமாக வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
முதலில் பாலிவுட் சினிமா தான் உச்சமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆதிக்கத்தை தென்னிந்திய சினிமா துறை தட்டி தூக்கி வருகிறது. இதனால் தமிழ் இயக்குனர்கள் பலரை பாலிவுட் சினிமா படம் இயக்க அழைத்து வருவதும் வாடிக்கையாகி இருக்கிறது.
ஏஆர் முருகதாஸ் தொடங்கி சமீபத்தில் ஜவானை இயக்கிய அட்லீ வரை தமிழ் சினிமாவிலிருந்து சென்றவர்கள் தான். தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமான வெங்கட் பிரபுவும் பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாக தமிழில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களை ரீமேக் செய்வதை அக்ஷய்குமார் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த முறை ரீமேக் இல்லாமல் இயக்குனரையே அலேக்காக தூக்க முடிவெடுத்து விட்டாராம். அந்த வகையில் அவரின் அடுத்த இயக்குனராக வெங்கட் பிரபு இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பல நாயகர்களின் பெயர்கள் அடிபட்டது. அடுத்து எஸ்கே இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தற்போது எஸ்கே25 திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் அதற்கு பாலிவுட் பக்கம் வெங்கட் பிரபு சென்று வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.