256 அடி கட்டவுட்!.. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.. செலவு மட்டும் இத்தனை லட்சமா?..

By :  Ramya
Update: 2024-12-29 12:26 GMT

ramcharan

நடிகர் ராம்சரண்: தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம்சரண். இவருக்கு தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் இவர்களுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக ஜொலித்து வரும் ராம்சரண் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மூலமாக இந்திய அளவில் பிரபலமாக இருந்த ராம்சரண் உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார். இப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இந்த திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகின்றார்.


இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் படு பிஸியாக இறங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அமெரிக்காவில் தொடங்கி இருந்தது. தொடர்ந்து இயக்குனர் சங்கர் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ராம்சரண் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ராம்சரண் ரசிகர்கள் மிகப்பெரிய சம்பவம் ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதாவது ஆந்திராவில் ராம்சரனுக்காக அவரின் ரசிகர்கள் 256 அடிக்கு கட்டவுட் ஒன்றை வைத்து இருக்கிறார்கள்.

தற்போது வரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட்டவுட் வைத்ததே இல்லை. கிட்டத்தட்ட பத்து லட்சம் செலவு செய்து ராம்சரனின் ரசிகர்கள் இந்த கட்டவுட்டை வைத்திருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது. கட்டவுட்டுக்கு இவ்வளவு செலவா? என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இருப்பினும் பல நாட்கள் கடுமையாக உழைத்து ராம்சரனுக்காக அவரின் ரசிகர்கள் இந்த கட்டவுட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இது இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு முன்பு பிரபாஸுக்கு 200 அடிக்கு ஒரு கட்டவுட் வைத்திருந்தார்கள். அதனை தற்போது ராம் சரண் ரசிகர்கள் முறியடித்து இருக்கிறார்கள். கட்டவுட்டை போலவே படமும் மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.


அந்த எண்ணத்தை இயக்குனர் சங்கர் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் மீது இயக்குனர் சங்கர் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கின்றார். இந்தியன் 2 திரைப்படத்தில் பட்ட அவமானத்தை இப்படத்தின் மூலம் துடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகின்றது.

Tags:    

Similar News