7ஜி ரெயின்போ காலனி 2: படத்துல பஞ்சாயத்து இருந்தாலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விட்ட செல்வா!..

By :  Murugan
Update: 2025-01-01 09:36 GMT

7G Rainbow colony2: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். தம்பி தனுஷை துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் செய்து வைத்து நடிப்பை சொல்லிக்கொடுத்தவர் இவர்தான். அடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை என அதிரடி திரைப்படங்களை இயக்கினார்.

இவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது. இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அடுத்து மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என செல்வராகவன் இயக்கிய படங்கள் வெற்றியை பெறவில்லை.


சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே படமும் தோல்வி அடைந்தது. அதன்பின் செல்வா பக்கம் பெரிய நடிகர்கள் யாரும் போகவில்லை. சந்தானத்தை வைத்து இயக்கிய மன்னவன் வந்தானடி படம் பாதியிலேயே நின்றது. சிம்புவை வைத்து துவங்கிய கான் படமும் சில நாட்களில் நின்று போனது.

அதன்பின் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் தம்பி தனுஷை வைத்து நானும் வருவேன் போன்ற படங்களை இயக்கினார். இந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. எனவே, சினிமாவில் நடிக்க துவங்கினார் செல்வராகவன். சாணி காயிதம், பீஸ்ட், பஹாசுரன், ராயன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவியை வைத்து செல்வராகவன் இயக்கி 2004ம் வருடம் வெளியான படம்தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில்தான் சோனியா அகர்வால அறிமுகமானார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா கொடுத்த பாடல்கள் மனதை மயக்கும் மெலடிகளாக அமைந்தது.

இந்நிலையில்,, 20 வருடங்கள் கழித்து இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் ஹீரோ ரவியே நடிக்க கதாநாயகியாக புதுமுகம் அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை செல்வராகவன் இன்று வெளியிட்டுள்ளார்.


இந்த படம் பாதி உருவான நிலையில் இப்படத்தின் ஹீரோ ரவிக்கும், செல்வராகவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தை அப்படியே விட்டுவிட்டு ஜிவி பிரகாஷை வைத்து மெண்டல் மனதில் என்கிற படத்தை துவங்கிவிட்டார். ஆனாலும், இன்று 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News