22 வருஷத்துக்கு பிறகு தென்னிந்திய சினிமாவுக்கு திரும்பும் நடிகை.. ராஜமௌலியின் பலே பிளான்!..

By :  Ramya
Update: 2024-12-29 11:21 GMT

rajamouli

இயக்குனர் ராஜமௌலி: தென்னிந்திய சினிமாவை தான் இயக்கிய திரைப்படங்களின் மூலமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை எஸ் எஸ் ராஜமௌலியை சேரும். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. மகதீரா, மாவீரன், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

அதிலும் இவர் கடைசியாக இயக்கிய ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் பிலிம்ஸ் வரை சென்று மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்களான நிலையில் அடுத்ததாக இவர் எந்த திரைப்படத்தை இயக்கப் போகின்றார் என்கின்ற கேள்வி எழுந்து வந்தது. சமீப நாட்களாக தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.


இந்த திரைப்படத்திற்கு எஸ்எஸ்எம்பி 29 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை ராஜமௌலி எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் படம் எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகின்றார் என்கின்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. அதாவது ராஜமவுலி இந்த திரைப்படத்திற்காக ஆக்ஷன் காட்சிகளின் நடிக்கும் நடிகையை தேடி வருவதாகவும் இதற்கு பிரியங்கா சோப்ரா சரியாக இருப்பார் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

ஒருவேளை இந்த திரைப்படத்தில் மட்டும் பிரியங்கா சோப்ரா கமிட்டாகிவிட்டார் என்றால் இவர் இந்திய சினிமாவில் 8 வருடம் கழித்து நடிக்கப் போகும் திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும். தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்த வந்தார். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா தொடர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார். பாலிவுட் பக்கமே தலை காட்டாமல் இருந்து வரும் பிரியங்கா சோப்ரா தற்போது ராஜமவுலி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் உலா வருகின்றது .பிரியங்கா சோப்ரா கடைசியாக தி ஸ்கை இஸ் பிங்க் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்டது.


அதேபோல் இவர் தென்னிந்திய சினிமாவில் தமிழன் திரைப்படத்திற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அப்படி பார்த்தால் இவர் தென்னிந்திய சினிமாவில் நடித்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ராஜமவுலி கடந்த ஒரு வருடமாக டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags:    

Similar News