சம்பாதிச்ச காசுலாம் இப்படி வீணாப்போச்சே!.. இந்தி படம் எடுத்து போண்டி ஆன அட்லீ!...
Director Atlee: ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர்தான் இந்த அட்லீ. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படமே ஹிட் அடித்தது. அதோடு, விஜய்க்கு இந்த படம் பிடித்துப்போக அவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார்.
அப்படி உருவான படம்தான் தெறி. தனக்கு சரியான கதையை பிடிக்கும் அட்லி விஜய்க்கு மிகவும் பிடித்துப்போக மெர்சல், பிகில் என அவரின் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடித்தார். விஜயை வைத்து 3 படங்கள் இயக்கியதால் பெரிய இயக்குனராக மாறினார் விஜய். அதோடு, குரு ஷங்கரை போலவே அதிக பட்ஜெட்டுகளில் படமெடுத்து தயாரிப்பாளர்களை கதறவிட்டார்.
மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதன்பின் படமே தயாரிக்கவில்லை. இதுதான் அட்லியின் வெற்றி. சரி இனிமேல் தமிழில் தயாரிப்பாளர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள் என்பதை புரிந்துகொண்ட அட்லி தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்களுக்கு வலை விரித்தார். அதன் முயற்சியாக ஷாருக்கானே அவருக்கு கிடைக்க ஜவான் படம் உருவானது.
பக்கா கமர்சியல், செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் படமாக இப்படத்தை உருவாக்கினார் அட்லீ. இந்த படம் ஹிந்தி பேசும் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்து 1300 கோடி வரை வசூல் செய்தது. எனவே, சல்மான்கான் போன்ற நடிகர்களும் அட்லியின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர்.
ஜவான் படத்திற்கு பின் சல்மான்கான், கமல் என பெரிய நடிகர்களை வைத்து ஒரு படத்தை இயக்கும் திட்டம் அட்லீக்கு இருக்கிறது. ஆனால், இதுவரை அப்டேட் வெளியாகவில்லை. ஒருபக்கம், தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து பேபி ஜான் என்கிற படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் சல்மான் கான் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால், அட்லிக்கு ஹிந்தி பேசும் வினியோகஸ்தர்கள் சரியான ஆதரவு கொடுக்கவில்லை. எனவே, வட மாநிலங்களில் இப்படம் டேக் ஆப் ஆகவில்லை. 160 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக சொல்லப்படுகிறது. கடந்த 25ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 25 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. எனவே, இப்படத்தால் அட்லீக்கு கிட்டத்தட்ட 135 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் என்றால் என்னவென்று அட்லீக்கு இப்போது புரிந்திருக்கும் என்கிறது கோலிவுட்!...