சிம்பு, தனுஷை எஸ்.கே. தாண்டியது இப்படித்தான்!.. ஜுனியரா வந்து உச்சத்துக்கு போயிட்டாரே!..
Sivakarthikeyan: சினிமாவில் யார் எப்போது மேலே போவார் என சொல்லவே முடியாது. திடீரென ஒரு நடிகர் அறிமுகமாகி டேக் ஆப் ஆகி உச்சத்தை தொட்டுவிடுவார். அப்படி மேலே போனவர்தான் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து உச்சம் தொட்டவர் இவர்.
சிவகார்த்திகேயனை தனது 3 படத்தில் சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். அதன்பின் அவரின் திறமையை பார்த்துவிட்டு எதிர் நீச்சல், காக்கி சட்டை என 2 படங்களை தயாரித்தார். ஒருபக்கம், ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என தொடர் ஹிட் படங்களை கொடுத்து மளமளவென முன்னேறினார்.
இதனால் சீனியர்களான சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, விக்ரம் போன்ற நடிகர்களின் சம்பளத்தை விட சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் வாங்கி மேலே போனார். அவரின் வளர்ச்சியை பார்த்து பல நடிகர்களும் பொறாமைபட்டார்கள். இதை அஜித்தே சிவகார்த்திகேயனிடம் ஒருமுறை சொன்னார்.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான அமரன் படம் 300 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. எனவே, அவரின் சம்பளம் 70 கோடியாக மாறியிருக்கிறது. சினிமாவில் வளர்ச்சி என்பது சுலபம் அல்ல. திறமை, உழைப்பு, பொறுமை, விட்டு கொடுப்பது, பிரச்சனைகளை சமாளிப்பது என எல்லாமே தேவை. சிவகார்த்திகேயனிடம் இது எல்லாமே இருக்கிறது.
சிம்பு பண விஷயத்தில் கறாராக இருப்பார். பாதி படம் நடித்துவிட்டு சில கோடிகளை சேர்த்து கேட்பார். தயாரிப்பளரால் அவர் கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லை எனில் ‘டப்பிங் பேச மாட்டேன், படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன்’ என குடைச்சல் கொடுப்பார். ஆனால், எஸ்.கே. அப்படி இல்லை.
சொந்தமாக படத்தை தயாரித்து 100 கோடி வரை கடனாளியாக மாறினார் எஸ்.கே. இதனால் அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது பிரச்சனை செய்தார்கள். அதை சாமர்த்தியமாக சமாளித்தார். தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்தார். அதோடு, சில கோடிகள் கடன் வாங்கி படத்தை ரிலீஸ் செய்ய உதவினார். எனக்கு சம்பளம் இல்லையென்றாலும் பரவாயில்லை பரவாயில்லை படம் ரிலீஸாகட்டுமெ. அதுவே எனக்கு முக்கியம் என சொன்னார். அயலான் படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை. கடனில் கழிந்து போனது.
ஒருபக்கம், தான் நடித்தால் மட்டும் போதாது. எந்த இயக்குனருடன் வேலை பார்க்க வேண்டும் என கச்சிதமாக காயை நகர்த்துகிறார். சுதாகொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியதும் ‘நான் இதில் நடிக்கவா மேடம்?’ என சிவகார்த்திகேயனே கேட்டு இப்போது அதை தனது படமாக மாற்றிவிட்டார். இதுதான் சாதுர்யம். ‘நான் பெரிய ஹீரோ. நான் ஏன் கேட்க வேண்டும்? என்கிற ஈகோ அவருக்கு இல்லாததால்தான் இப்போது புறநானூறு படத்தின் ஹீரோவாக மாறியிருக்கிறார். கண்டிப்பாக அவரின் திரை வாழ்வில் அமரனுக்கு அடுத்து புறநானூறு ஒரு முக்கிய படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல், அஜித்துக்கு தீனா, சூர்யாவுக்கு கஜினி, விஜயகாந்துக்கு ரமணா, விஜய்க்கு துப்பாக்கி என பேசப்பட்ட படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸை இப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது கேட்டால் அவர் நம்மை ஹீரோவாக போட்டு படமெடுப்பார் என்பதை புரிந்துகொண்டு அவரை அப்ரோச் செய்து அவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இனிமேல் எனது படங்கள் பெரிய படங்களாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
இப்படி எதையும் யோசித்து, ஸ்கெட்ச் போட்டு காயை நகர்த்தி கச்சிதமாக சிம்பு, தனுஷை ஓவர் டேக் செய்து முன்னேறி வருகிறார் சிவகார்த்திகேயன்.