விஜயகாந்துடன் கடைசி சந்திப்பு.... ராதாரவியை யாருன்னு கேட்ட கேப்டன்
தமிழ்த்திரை உலகில் கேப்டன், புரட்சிக்கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என்றெல்லாம் அடையாளமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். இவரிடம் யாராவது உதவி என்று கேட்டால் தயங்காமல் செய்யக்கூடியவர். அதே போல பசிக்கும் வயிற்றுக்கு வயிறாற சோறு போட்டு அழகு பார்ப்பவர்.
இவர் தான் முதன்முதலில் சினிமா படப்பிடிப்பில் தனக்கு சமமாக அத்தனை பேருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இவரை வந்து அலுவலகத்தில் யார் பார்க்க வந்தாலும் முதன் முதலாக அவர் கேட்கும் கேள்வி 'சாப்பிட்டீர்களா...' என்பதுதான். இவர் தன் வீட்டுக்கு வந்து பார்க்கும் நண்பர்கள் உள்பட யாராக இருந்தாலும் இவரே அவர்களுக்கு முதல் வேலையாக சாப்பாடு பரிமாறுவாராம். அதே போல எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்துள்ளார் விஜயகாந்த்.
அரசியலில் கூட கட்சி ஆரம்பிக்கும்போது கலைஞருக்கு கொண்டு அழைப்பிதழ் கொடுத்துள்ளார். தன்னைத் தான் எதிர்த்து நிற்கப் போகிறார் என்று தெரிந்தும் கலைஞர் அவரை வாழ்த்தியுள்ளார் என்பது அவரது பெருந்தன்மை என்கிறார் ராதாரவி.
அதே போல ராதாரவியின் தந்தை எம்ஆர்.ராதா சிலை திறப்பு விழா சமயத்தில் அவருக்கு ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது. அவரது நண்பர்கள் வாகை சந்திரசேகர், தியாகு உள்பட பலரும் வந்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு வேண்டிய வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். அப்போது விஜயகாந்தும் வருகிறார். அவரிடம் விவரத்தைத் தான் சொல்லி இருக்கிறார் ராதாரவி. இந்த நிலைமையில் தான் இப்போ இருக்கேன். கொஞ்சம் பணம் கிடைச்சதுன்னா நிகழ்ச்சியை நடத்தி முடிச்சிடலாம்னு சொல்லி இருக்கிறார். உடனடியாக ராவுத்தரை அழைத்து 25 ஆயிரம் ரூபாயை கொடுத்தாராம் விஜயகாந்த்.
அந்த வகையில் நண்பனுக்கு ஒரு உதவின்னா அவர் கேட்காமலேயே செய்யக்கூடியவர். அவரது இறுதிநாள்கள் தான் சோகமயமானது. அரசியலில் கூட வலுவான எதிர்க்கட்சி தலைவராக திகழ்ந்தார்.
2018ல் தான் விஜயகாந்தை ராதாரவி கடைசியாக சந்தித்துள்ளார். அப்போது அவரது உடல்நிலை குறித்து நட்புரீதியாக பார்க்கப் போனாராம். அப்போது விஜயகாந்த் என்ன ரவி... எப்படி இருக்க? அப்படி இப்படின்னு எல்லாம் நிறைய பேசினாராம்.
கடைசில பக்கத்துல இருந்தவருக்கிட்ட 'இவர் யாரு..?' ன்னு கேட்டாராம். அந்த உடனே ராதாரவி விஜயகாந்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு 'சரி. நீங்க ரெஸ்ட்ல இருங்க. கிளம்புறேன்'னு வந்துவிட்டாராம். அந்த நிலையில் ராதாரவி தனக்கு மனசே ரொம்ப வெடிச்சிப் போச்சுன்னு ஃபீலிங்கோடு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.