அவன விட எனக்கு அதிக சம்பளம் வேணும்!.. விடுதலை 2 பட நடிகர் செம உஷார்!..
Viduthalai 2: வெற்றிமாறன் இயக்கி கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம்தான் விடுதலை 2. இந்த படத்தின் முதல் பாகம் 2023ம் வருடம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் வெற்றிமாறன் பெருமாள் வாத்தியார் என்கிற நிஜ கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இந்த் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
காமெடி நடிகராக நடித்து வந்த சூரியை இப்படத்தில் ஹீரோவாக மாற்றினார் வெற்றிமாறன். அதேநேரம், வழக்கமான ஹீரோவை போல இல்லாமல் கதையின் நாயகனாகவே நடித்திருந்தார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘வழி நெடுக காட்டுமல்லி’ பாடல் சூப்பர் மெலடியாக அமைந்தது.
அதன்பின் விடுதலை 2 படம் உருவானது. முதல் பாகத்தில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருந்தது. அவர் ஏன் அரசுக்கு எதிராக போராட முடிவெடுத்தார்? மஞ்சு வாரியருடன் அவருக்கு ஏற்பட்ட காதல் ஆகியவை இந்த பாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் நன்றாக இருந்தாலும் படம் முழுக்க விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருக்கிறார் என பலரும் சொன்னார்கள். எனவே, முதல் பாகம் போல 2ம் பாகம் பெரிய வெற்றியை பெறவில்லை. படம் லாபமா இல்லை என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்.
இந்த படத்தில் ராஜீவ் மேனன், கவுதம் மேனன், தமிழ் உள்ளிட்ட 10 இயக்குனர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்திருந்தார். இந்த அடத்தில் அரசு அதிகாரியாக ராஜீவ் மேனன் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக கவுதம் மேனன் நடித்திருந்தார்.
கவுதம் மேனன் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக வேலை செய்தவர். எனவே, இந்த படத்தில் ராஜீவ் மேனனை படக்குழு ஒப்பந்தம் செய்தபோது அவரின் சம்பளம் பற்றி பேச்சி வந்திருக்கிறது. அப்போது ‘கவுதம் மேனனுக்கு என்ன சம்பளம்?’ என கேட்டிருக்கிறார் ராஜீவ் மேனன். அவரின் சம்பளத்தை அவர்கள் சொல்ல அதை விட அதிக தொகையை சொல்லி இந்த சம்பளம் வேண்டும் என் ராஜீவ் மேனன் சொல்ல, அதையே கொடுப்பதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டாராம். சிஷ்யனை விட தனக்கு அதிக சம்பளம் இருக்க வேண்டும் என்பதில் ராஜீவ் மேனன் உஷாராக இருந்திருக்கிறார். ராஜீவ் மேனன் தமிழில் மின்சார கனவு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.