கேப்ப ஃபில்ப் பண்றதுக்கு இப்படி ஒரு முயற்சியா?.. உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல!..
இயக்குனர் வெங்கட் பிரபு: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. முதலில் நடிகராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் நடித்த போதிலும் பிரபலமாகவில்லை. அதனை தொடர்ந்து இயக்குனராக களமிறங்கிய வெங்கட் பிரபு தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். சென்னை 600028 திரைப்படம் இன்றளவும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்திருக்கின்றது.
அதனை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து மங்காத்தா என்கின்ற திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தார். இந்த திரைப்படம் நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு கடைசியாக நடிகர் விஜய்யை வைத்து கோட் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் பாக்ஸ் ஆபிஸில் 460 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் படத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
அதிலும் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் நடித்திருந்தார். மகன் விஜய் நெகட்டிவ் கதாபாத்திரமாக காட்டப்பட்டிருந்தது. நீண்ட காலங்களுக்கு பிறகு நெகடிவ் கதாபாத்திரத்தில் விஜயை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள். கோட் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 மாதம் ஆகும் நிலையில் தற்போது வரை வெங்கட் பிரபு என்ன செய்கின்றார் என்பது யாருக்குமே தெரியவில்லை.
கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். இதனால் அடுத்த திரைப்படம் கட்டாயம் சிவகார்த்திகேயனுடன் தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இது ஒரு புறம் இருக்க சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வேறு இயக்குனர்களுடன் கமிட்டாகி படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படி இருக்க வெங்கட் பிரபு அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பாலிவுடில் பிரபல நடிகராக இருக்கும் அக்ஷய்குமார் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு முடிவு செய்து இருக்கின்றாராம். சிவகார்த்திகேயன் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் அப்படியே பாலிவுட் பக்கம் சென்று வரலாம் என்று முடிவு செய்து இருக்கின்றாராம்.
பாலிவுட் பிரபலமான அக்ஷய் குமாரிடம் கதையை கூறி இருப்பதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து இருப்பதால் சிவகார்த்திகேயன் அடுத்து வரும் வரை அந்த கேப்பை ஃபில் செய்வதற்காக பாலிவுட்டில் படத்தை இயக்குவதற்கு வெங்கட் பிரபு முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகின்றது.