இருங்க பாய்!.. 'சவதீகா' பாடல்ல நம்ம அஜித் டான்ஸ் கொஞ்சம் பாருங்க.. ஒரே வைப் தான்..
நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் கடந்த 2 வருடங்களாக அஜித்தின் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. இருப்பினும் அடுத்த வருடம் நடிகர் அஜித்தின் இரண்டு திரைப்படங்கள் வெளியாவதற்கு தயார் நிலையில் இருக்கின்றது. கடந்த 2 வருடத்திற்கு முன்பு பொங்கலுக்கு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி.
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2 வருடங்களாக இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. ஒரு வழியாக வரும் பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடந்து முடிந்தது. இந்த ஷூட்டிங்கில் அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் படக்குழுவினருடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் பக்கங்களில் வைரலாகி வந்தது. விடாமுயற்சி திரைப்படத்தை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்து இருக்கின்றார் நடிகர் அஜித்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அஜித்தின் அடுத்த அடுத்த திரைப்படங்கள் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே இருக்கின்றன.
முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். அதன்படி காலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது. இது வீடியோவாக இல்லாமல் ஆடியோவாக மட்டுமே வெளியாகி இருந்தது.
மேலும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி சவதீகா என்ற வீடியோ வெளியாகி இருக்கின்றது. இது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கோட் சூட்டில் நடிகை திரிஷாவுடன் இணைந்து நடிகர் அஜித் மிகவும் சிறப்பாக நடனமாடி இருக்கின்றார்.
இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து பழைய அஜித்தாக நடனமாடும் வீடியோ ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கின்றது.