அடங்காத புஷ்பா 2.. அட்லியின் பேபி ஜானையும் அடிச்சி துவம்சம் செஞ்சிருச்சே!..

By :  Murugan
Update: 2024-12-28 05:07 GMT

pushpa2

அல்லு அர்ஜூன் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம்தான் புஷ்பா 2. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அடுத்து 2ம் பாகம் உருவானது. வழக்கமான தெலுங்கு படங்களில் வரும் எல்லா மசாலாக்களையும் ஒன்று சேர்த்து படத்தை உருவாக்கியிருந்தார்கள்.

மனைவியின் ஆசை எப்படி புஷ்பா நிறைவேற்றுகிறார் என்பதையே இப்படத்தின் இயக்குனர் சுகுமார் திரைக்கதையாக அமைத்து படத்தை எடுத்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, பெங்காலி, மலையாளம் என 6 மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது.


அனைத்து மொழிகளிலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. மிகவும் குறைவான நாட்களிலேயே 500 கோடி வசூலை இப்படம் தொட்டது. 10 நாட்களில் ஆயிரம் கோடியை தாண்டியது. அப்போதுதான் சிறப்பு காட்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழக்க இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜூனை தெலுங்கானா போலீஸர் கைது செய்தனர்.

இதுவே இந்த படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்துவிட்ட அடுத்து 3 நாட்களில் இப்படம் 1500 கோடி வசூலை தொட்டது. இதில் ஆச்சர்யம் என்னவெனில், ஹிந்தி பேசும் வட மாநிலங்களிலும் புஷ்பா 2 படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஹிந்தியில் படம் வெளியாகி 13 நாட்களில் 600 கோடியை இப்படம் வசூல் செய்தது.


இந்த வசூலை ஒரு நேரடி ஹிந்தி படம் கூட செய்தது இல்லை. ஹிந்தியில் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானின் ஜவான் கூட 13 நாட்களில் 507.88 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. ஹிந்தியில் 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இப்படத்திற்கு கூட்டம் அலை மோதுகிறது. அட்லியின் தயாரிப்பில் உருவாகி அதிக அளவில் புரமோஷன் செய்யப்பட்டு வெளியான பேபி ஜான் படத்திற்கு கூட எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இத்தனைக்கும் இந்த படத்தில் சல்மான்கான் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் இது.

புஷ்பா2 இதுவரை 1800 கோடி வசூலை தாண்டிவிட்டது. விரைவில் 2 ஆயிரம் கோடி வசூலை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், தியேட்டர் நெரிசலில் சிக்கி உயிரிந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜூனும், புஷ்பா 2 தயாரிப்பாளரும் சேர்ந்து 2 கோடி நிதியுதவி செய்துள்ளனர்.

Tags:    

Similar News