2024ல முடிச்சுவிட்டீங்க!.. 2025-ல் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் டாப் ஹீரோ படங்கள்!..
2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் டாப் நடிகர்களின் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இந்த வருடம் ஏறத்தாழ முடிவடைய உள்ளது. தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான டாப் நடிகர்களின் படங்கள் பல எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நிச்சயம் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்கள் பிஸியாக நடித்து வருகிறார்கள். அவர்களின் படங்கள் லிஸ்ட் குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
நடிகர் கமல்ஹாசன்:
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து கடுமையான ட்ரோல்களுக்கு ஆளானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்கிட்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் நிச்சயம் வெற்றி படமாக கமல்ஹாசனுக்கு அமையும் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய்:
நடிகர் விஜய் கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும் படம் ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. தற்போது நடிகர் விஜய் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் இவரின் கடைசி படம் என்று கூறப்படுகின்றது. இப்படம் எப்படியும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமையும் என்று விஜயின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் சூர்யா:
நடிகர் சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. படம் கடுமையான விமர்சனங்களை பெற்ற காரணத்தால் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்தப் படமாவது நடிகர் சூர்யாவுக்கு வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
நடிகர் விக்ரம்:
நடிகர் விக்ரம் கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தாலும் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அடுத்ததாக வீர தீர சூரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் நிச்சயம் விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.