10 அடிக்கு ஒரு பேனர்.. 100 அடி கொடி.. பிரம்மாண்டம் காட்டும் விஜய்... இனி எல்லாம் தளபதிதான்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்தப்போகும் மாநாடு குறித்த அப்டேட் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சோசியல் மீடியாக்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் டிவி சேனல்கள், நியூஸ் சேனல்கள் என எங்கு பார்த்தாலும் நடிகர் விஜய் நடத்த இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு குறித்த செய்திகள் தான் வலம் வருகின்றன. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் தொடர்பான தகவல் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது நடிகர் விஜய் மாநாட்டில் கவனம் செலுத்த இருப்பதால் அதற்காக பிரேக் எடுத்து இருக்கின்றார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். அவர் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று கூறியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அறிவுப்போடு மட்டும் நின்று விடாமல் தேர்தல் ஆணையத்தில் பதிவு, கொடி, அறிமுக பாடல், மாநாடு என்று தொடர்ந்து தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய்.
பல்வேறு சிக்கல்களை தாண்டி தற்போது இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருக்கும் விசாலை பகுதியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்று வருகின்றது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு 4 பார்க்கிங், 85 ஏக்கரில் மாநாடு, 100 அடி கொடிக்கம்பம் என பல ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் 10 அடிக்கு ஒரு பேனர், பிரம்மாண்டமான மேடை என பல கோடி ரூபாய் செலவில் அனைத்து ஏற்பாடுகளும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு நடைபெற்று வருகின்றது. இதற்காக மட்டும் 25 குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். மாநாட்டு திடலில் கல்விக்கண் திறந்த காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்டவுட்டுகளுக்கு இடையே நடிகர் விஜயின் கட்டவுட் இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் இந்த மாநாட்டிற்காக விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்தம் அடிப்படையில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நிலத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் குத்தகை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலங்கள் கொடுத்த விவசாயிகளை நடிகர் விஜய் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது. இப்படி பல பிரம்மாண்டங்களை தமிழக வெற்றி கழகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.