வடிவேலுவைப் பாட வைக்க ஏ.ஆர்.ரகுமான் செய்த அந்த விஷயம்! சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!

By :  Sankaran
Update:2025-02-21 14:25 IST

வைகைப்புயல் என்று தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. இவர் சினிமாவில் நுழையும்போது ரொம்பவும் பஞ்சத்தில் அடிபட்டது போல இருந்தார். அதன்பிறகு தனது தனித்திறனால் படிப்படியாக முன்னேறி தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் ஆனார்.

ராசாக்கண்ணு பாடல்: இன்று எந்த மீம்ஸ் என்றாலும் இவர்தான்னு சொல்ற அளவுக்கு மீம்ஸ் கிரியேட்டராகவும் மாறிவிட்டார். வடிவேலு சினிமாவில் வெறும் காமெடியன் மட்டும் அல்ல. அவர் சிறந்த பாடகரும் கூட. எட்டணா இருந்தா, ரயிலு ரயிலுன்னு இவர் பல பாடல்களையும் பாடி நடனமாடி அசத்தியுள்ளார்.

இவர் கடைசியாக மாமன்னன் படத்தில் 'ராசாக்கண்ணு' என்ற பாடலைப் பாடியுள்ளார். இது நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்தப் பாடலை அவ்வளவு அருமையாக பாடியிருப்பார் வடிவேலு.


பாட மறுத்த வடிவேலு: இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் பாடலை பாட முதலில் மறுத்து விட்டாராம். அதன்பிறகு ஏ.ஆர்.ரகுமான் அவரைப் பாட வைக்க என்ன செய்தாருன்னு பிரபல பாடலாசிரியர் யுகபாரதி சொல்கிறார் பாருங்க.

மாமன்னன் படத்தில் வரும் ராசாக்கண்ணு பாடலை முதலில் வடிவேலு சார் என்னமோ தெரியல. இந்தப் பாட்டை என்னால பாட முடியலன்னு சொல்லிட்டாரு. அப்போ அங்கிருந்த ரகுமான் சார் வடிவேலு சாருக்கு காபி கொடுக்கச் சொன்னாரு.

15 நிமிஷத்துல பாட்டு: அப்புறம், நீங்க நாகூர் அனிபா பாட்டெல்லாம் பாடுவீங்க தானே. இதையும் பாடுங்கன்னு சொன்னாரு. அப்புறம் நாலு நாலு வரியாகப் பாடச் சொன்னார். அதே மாதிரி வடிவேலு சாரும் பாடினார். அடுத்த 15 நிமிஷத்துல மொத்த பாட்டையும் வடிவேலு சார் பாடி முடித்து விட்டார் என்கிறார் யுகபாரதி. 

மாமன்னன்: 2022ல் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கிய படம் மாமன்னன். இந்தப் படத்தில் வடிவேலுவுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலினும் நடித்துள்ளார். பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்பட பலரும் நடித்துள்ளனர். படத்தில் வடிவேலுவின் நடிப்பு பேசப்பட்டது. வழக்கமான காமெடி நடிகராக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார் வடிவேலு.

Tags:    

Similar News