அஜித்தின் லவ் ஸ்டோரி... உங்க வேலைய பாத்துட்டு போறீங்களா..? வெங்கடேஷ் பட் பகிர்ந்த சுவாரஸ்யம்..!
அஜித்தின் லவ் ஸ்டோரி தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை செஃப் வெங்கடேஷ் பட் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஆரம்பம் முதலே சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த இவர் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருகின்றார். தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது தமிழில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஒரு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்து நிலையில் தொடர்ந்து சூட்டிங்கில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. கடந்த மாதத்தில் தான் படக்குழுவினர் படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்தார்கள். இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்ற நிலைமை ஆகிவிட்டது.
தொடர்ந்து ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டை கேட்டு சலித்து விட்டார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் இது திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி இரண்டு திரைப்படத்தில் ஏதாவது ஒரு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பது உறுதியாகி இருக்கின்றது. நடிகர் அஜித்துக்கு சினிமாவை தாண்டி ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது பைக்கை எடுத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலாவுக்கு கிளம்பி விடுவார்.
அதே போல் சமீபத்தில் அவர் கார் ரேஸ்-ஸில் பங்கேற்க இருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் குறித்த தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஷாலினி திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்து வருகின்றார்.
அவ்வபோது இவர்கள் இருவரும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும். இந்நிலையில் இவர்களின் காதல் குறித்து வெங்கடேஷ் பட் ஒரு சுவாரசிய கதையை பகிர்ந்து இருக்கின்றார். 2000 ஆண்டில் அஜித் ஷாலினி திருமணம் சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடந்த சில மாதத்திற்கு முன்பு தங்களின் 24 ஆவது திருமண நாளை இவர்கள் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.
இந்நிலையில் தீனா படத்தின் ரிலீஸ் போது தென்னிந்திய சமையல் கலைஞராக ஒரு பிரபல ஹோட்டலில் வெங்கடேஷ் பட் வேலை பார்த்து வந்திருக்கின்றார். அந்த ஹோட்டலுக்கு ஷாலினியும் அஜித்தும் வந்ததாக கூறப்படுகின்றது. உடனே அவரிடம் சென்ற வெங்கடேஷ் அஜித்தை நோக்கி யார் உங்களில் முதலில் காதலை கூறியது என்று கேட்டிருக்கின்றார். இதுவே வேறு ஒரு நபராக இருந்திருந்தால் உங்களுக்கு அதெல்லாம் எதற்கு, உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியிருப்பார்கள்.
அவரோ சாதாரணமாக ஷாலினி எங்கெங்க காதலை சொன்னாங்க, நான் தான் அவங்க பின்னாடி போய் ஐ லவ் யூ சொன்னேன் என்று அஜித் கூறியதாக வெங்கடேஷ் பட் கூறியிருந்தார். அவர் என்னிடம் ஒரு நண்பனிடம் பேசுவது போல அவர் காதல் கதையை பகிர்ந்து கொண்டார். அவர் அனைவரையும் சமமாக மதிக்க கூடிய ஒரு நபர் என்று அஜித்தை குறித்து புகழ்ந்து பேசி இருக்கின்றார்.