தனுஷையும் வெற்றிமாறனையும் பிரிக்கவே முடியாது.. அதுக்கு காரணம் இதுதான்
vetrimaran
பொல்லாதவன் படத்தில் தொடங்கி அசுரன் திரைப்படம் வரைக்கும் தொடர்ந்து தனுஷுடன் பயணம் செய்து ஒரு வெற்றி இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் வெற்றிமாறன். தனுஷை வைத்து எடுத்த எல்லா படங்களுமே மாபெரும் வெற்றி படங்களாக அமைந்திருக்கின்றன. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ,அசுரன் என தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வந்த வெற்றிமாறன் மீண்டும் தனுசுடன் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து கொண்டே வருகின்றன .வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் ஆரம்பமாகும் என தனுஷ் தரப்பிலிருந்தும் வெற்றிமாறன் தரப்பிலிருந்தும் கூறிக் கொண்டே வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல பொதுவெளியில் தனுஷும் வெற்றிமாறனும் ஒரு அண்ணன் தம்பிகளாகவே பழகி வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் பொழுதும் இவர்களுக்குள் இப்படி ஒரு நெருக்கமா என்றும் ஆச்சரியப்பட வைக்கிறார்கள். அந்த அளவுக்கு இருவருமே நண்பர்களாகவும் சக தோழர்களாகவும் சகோதரர்களாகவும் பழகி வருகிறார்கள். என்றைக்கும் தனுஷை பற்றி வெற்றி மாறனும் வெற்றிமாறனை பற்றி தனுஷும் நெகட்டிவ்வான கமெண்ட்களை கூறியதே கிடையாது.
தற்போது சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் தயாராக இருக்கின்றது. அது வடசென்னை படத்தின் சாயல் போல இருக்கும் என்பதால் வடசென்னை படத்திற்காக தனுஷ் தரப்பிலிருந்து என் ஓ சி வெற்றிமாறன் கேட்க அதற்கு 20 கோடி தனுஷ் கேட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகியது. ஆனால் அவர் பணமே கேட்கவில்லை என பகிரங்கமாக அதற்கான விளக்கத்தை கொடுத்தார் வெற்றிமாறன். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். என் ஓ சி நான் தந்து விடுகிறேன். ஆனால் பணம் எதுவும் வேண்டாம் என்று தான் தனுஷ் கூறினாரே தவிர நெகடிவ் விமர்சனங்கள் தான் வெளியில் பரவி வருகின்றன என்று வெற்றிமாறன் தக்க விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல மூணு நிமிட வீடியோவை தன்னுடைய திருமண வீடியோவில் நயன்தாரா பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடாக கேட்டிருந்தார் தனுஷ். அது பெரிய அளவில் வைரலானது. அதை வைத்தும் இப்போது ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். மூன்று நிமிட வீடியோவுக்கு 10 கோடி கேட்ட தனுஷ் முழு ஸ்கிரிப்ட்டையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் என்றால் வெற்றிமாறனுக்கும் அவருக்கும் இடையே இருக்கும் அந்த நட்பை நம்மால் உணர முடிகிறது என சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் வெற்றிமாறனின் தாயார் ஒரு பேட்டியில் தனுஷை பற்றி கூறியதும் இன்று வைரலாகி வருகின்றன .
பொல்லாதவன் படத்தின் ஸ்கிரிப்ட் தனுஷிடம் சொன்ன போது அது தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போக அவர் சில தயாரிப்பாளர்களை கைகாட்டி இருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் போன எந்த தயாரிப்பாளர்களும் ஸ்கிரிப்ட் நன்றாக இருக்கிறது ஆனால் வேறு ஒரு டைரக்டரை வைத்து வேண்டுமென்றால் படத்தை எடுக்கலாம் எனக் கூறி அனுப்பி இருக்கிறார்கள் .ஆனால் தனுஷ் தரப்பில் வெற்றிமாறன் இருந்தால் இந்த படத்தில் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார். இப்படியே பல தயாரிப்பாளர்களை வெற்றிமாறன் கடந்து போக கடைசியாக 5 ஸ்டார் கதிரேசனிடம் இந்த கதை சென்று இருக்கிறது .
அவரும் வெற்றிமாறன் வேண்டாம் வேறொரு இயக்குனரை வைத்து படம் எடுக்கலாம் என சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதும் தனுஷ் எடுத்தால் வெற்றிமாறன் எடுக்கட்டும் அப்படி இல்லை என்றால் நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என சொன்னாராம். இப்படி எல்லாம் தனுஷ் எங்களுக்காக பல உதவிகளை செய்து இருக்கிறார். நாங்கள் இன்று இந்த அளவு நன்றாக இருக்கிறோம் என்றால் அதற்கு தனுஷ் தான் காரணம் .என்றைக்கும் தனுஷை நான் நினைப்பேன். நன்றியாக இருப்பேன். அன்று எப்படி இருந்தாரோ இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறார். வெற்றிமாறன் மீது ரொம்ப பிரியம். எங்க குடும்பத்து மேலயும் ரொம்ப பிரியமாக இருப்பார். ரொம்ப நல்ல பையன் என வெற்றிமாறன் தாயார் கூறியிருக்கிறார். இப்படி இருக்கிறவர்களை நெகட்டிவ் ஆக எப்படி பேசினாலும் பிரிக்க முடியுமா?