எதிர்பார்த்தது வேற! நடந்தது வேற.. இப்படி சொல்லிப்புட்டாரே ரஜினி?

அப்போ வேட்டையன் திரைப்படம் மெசேஜ் சொல்லும் படமாக இருக்காதா? ரஜினி சொன்னதை கேளுங்க

By :  rohini
Update: 2024-09-21 02:20 GMT

Rajini rajini

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒட்டுமொத்த பட குழுவும் வந்திருந்த நிலையில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ரஜினி என்றாலே சினிமாவில் அனைவருக்கும் ஒரு பிடித்தமான மனிதராக இருக்கிறார். அதனால் ஏராளமான பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். வேட்டையன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ரஜினிக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

இவர்களுக்கு மகனாக பகத் பாஸில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து ராணா ,அமிதாப்பச்சன் ,அபிராமி ,துஷாரா விஜயன், யோகி பாபு போன்ற பல நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத் .ரஜினி படம் என்றாலே அனிருத்துக்கு ஒரு தனி வேகம் பிறந்துவிடுகிறது.

இதற்கு முன் ரிலீசான இந்தியன் 2 திரைப்படத்தில் அவருடைய இசை ரசிக்கும்படியாக அமையவில்லை. ஆனால் வேட்டையன் திரைப்படத்தில் மனசிலாயோ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட இந்த பாடலுக்கு பல மில்லியன் ரசிகர்கள் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். இதன் மூலம் ஒரு பாடலுக்கு அதிகம் பேர் ரீல்ஸ் போட்ட பாடல் என்றால் அது மனசிலாயோ பாடல் தான்.

இந்த ஒரு தனி சிறப்பினை பெற்று இருக்கிறது வேட்டையன் திரைப்படம். படத்தின் இயக்குனர் த ச ஞானவேல். இதற்கு முன் சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஜெய் பீம் திரைப்படம் எந்த அளவு தாக்கத்தை ரசிகர்களிடமும் சரி அரசிடமும் சரி. ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த படம் வந்த பிறகுதான் அப்படிப்பட்ட ஒரு பழங்குடி மக்கள் இருக்கிறார்களா என்பதே அரசுக்கு தெரிய வந்தது. இதன் பிறகு அவர்களை தேடி போய் தேவையான உதவிகளை செய்து வந்தது. இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை கொடுத்தவர் ஜெய் பீம் இயக்குனர் தச ஞானவேல். இவர் அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்ற செய்தி வந்ததுமே ஜெய் பீம் படத்தைப் போன்று ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படத்தை அதுவும் ரஜினியை வைத்து சொல்லப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்தனர்.

ஆனால் நடந்ததே வேற. நேற்று விழாவில் ரஜினி பேசும்போது எப்படி வேட்டையன் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதை பற்றி கூறினார். முதலில் அவருடைய மகள் சௌந்தர்யா தான் ஞானவேலிடம் ஒரு கதை இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் ரஜினி ஞானவேல் என்றால் மெசேஜ் தான் சொல்லுவார். அது எனக்கு செட்டாகாது என கூறிவிட்டாராம்.

அதன் பிறகு ஞானவேல் ரஜினிக்கு போன் செய்து தன்னிடம் ஒரு கமர்சியல் கதை இருக்கிறது என்று சொல்ல அதுவும் நெல்சன் லோகேஷ் இவர்களைப் போல இல்லாமல் உங்களை வித்தியாசமான முறையில் ரசிகர்களிடம் காண்பிக்கிறேன் என்றும் கூறினாராம் .அதன் பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் ரஜினி.

இவர் சொன்ன பிறகுதான் இந்த படமும் ஒரு கமர்சியலான திரைப்படமாகத் தான் வரப்போகிறது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை ஜெய்பீம் மாதிரி ஏதாவது ஒரு மெசேஜ் சொல்லும் படமாக தான் வேட்டையன் திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதுவும் ரஜினி மாதிரியான ஒரு பெரிய நடிகர்கள் சொல்லும் போது அது இன்னும் வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக் கொண்டிருந்தனர்.ஆனால் எப்பவும் போல இந்த படமும் ஒரு கமர்சியல் பேக்கேஜாகத்தான் வரப்போகிறது.

Tags:    

Similar News