ஒருவழியா ஆரம்பிச்சிட்டாங்களா? போட்டிக்கு தயாராகும் தல.. விடாமுயற்சி பரபர அப்டேட்!..

விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்ச்சியாக தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது.

By :  Akhilan
Update: 2024-10-28 13:43 GMT

Vidamuyarchi: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் ஒரு வழியாக தொடங்கி இருப்பதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த ஆண்டு விஜய் மற்றும் அஜித் இருவரின் திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் மோதிக்கொண்டது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தன்னுடைய லியோ மற்றும் கோட் திரைப்படங்களை முடித்துவிட்டு தளபதி 69 திரைப்படத்திலும் இணைந்து விட்டார். ஆனால் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்குவதில் பெரிய அளவில் சுணக்கத்தை கொடுத்தது. ஒரு வழியாக படக்குழு முடிவெடுக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி அஜர்பைஜானில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்த கால சூழ்நிலை பல நாட்கள் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டது.

இதனால் பலகட்ட பிரச்சனைகளை தாண்டி விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் தன்னுடைய குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதுபோல தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த கட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கி இருப்பதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக நடிகர் ஆரவ் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி தினத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லைக்கா தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப் படக்குழு முடிவு எடுத்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Tags:    

Similar News